Poem
April 9, 2022
கவிதை
SHARE

அன்புக்குரிய கெட்டிக்கார காதலனே என் குட்டிக் குழந்தையே...
காதலுடன் ஒரு கடிதத்தை யாராவது வெறுமனேயேனும் எழுதி அனுப்புங்களேன் என்று நீ பதிவிட்ட அன்றே எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என்ன செய்ய? கொஞ்சம் வேலை பழு. அம்மாவும் அப்பாவும் வேலைக்கு
போவதால் வீட்டிலிருக்கிற நான் தான் வீட்டு வேலையையெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. சொல்ல மறந்து விட்டேன். பேங்க் எக்ஸாம்-க்காக கோச்சிங் போய் கொண்டிருந்தேன் இல்லையா.. ஆறு மாதம் போனேன். இப்போது
வீட்டிலிருந்த படியே படித்துக் கொண்டிருக்கிறேன். ஜித்துக்குட்டி இந்தச் சமூகம் அதுவும் இந்தக் குடும்ப அமைப்பு ரொம்பவே பெண்ணுக்கு எதிரானதாகவும் ஆணுக்கு சாமரம் வீசக் கூடியாதகவும் தான் இருக்கிறது.
என் அண்ணனும் படித்து முடித்து விட்டு வெட்டியாகத் தான் வீட்டிலிருக்கிறான். நான் அவனை படித்து விட்டு வேலைக்கு போகாதது பற்றி எதும் குறை சொல்ல வில்லை. ஆனால் சாப்பிட்ட தட்டை கூட கழுவி ஊற்றுவதில்லை.
இன்னும், அவன் துணிகளையே கூட அவன் துவைத்துப் கொள்வதில்லை. பசித்தால் சாப்பாடு போட்டு வந்து தரனும். ஆம்பள பையன் ன்னா அப்படி தான் இருப்பனாம். அம்மா பாட்டி எல்லாம் அவனுக்கு வக்காலத்து
வாங்குவார்கள்.
ஹையோ.. சாரி டி தங்கம். உம்மா.நீ காதல் கடிதம் கேட்டாயில்லையா. நான் என் கவலைகளையும் புலம்பல்களையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். கோவிச்சுக்காத. வா.. உம்மா. நான் நலம் டா ஆசக்காரனே. நீயும் நலமாய்
இருக்கனும் . இருப்பாய். எனக்கு உன் மீது காதல் வந்தது எப்படி என்றால்... இல்லை அது காதலா என்றெல்லாம் தெரிய வில்லை. வேண்டுமானால் இப்படி... காதற் காமம் எனச் சொல்லலாம். ஆமாம் முதலில் எனக்கு உன்
எழுத்தைத் தான் பிடித்தது. உன் எழுத்துக்களைத் தேடித் தேடி படித்தேன். படிக்க படிக்க உன் எழுத்திலிருக்கிற காதல்... பூச்சில்லாத தன்மை...உன் தீராப் காமம்... ஆறாப் பெருந்தவிப்பு ....
எல்லாம்..எல்லாம் பிடித்தது. இன்னும் கொஞ்சம் என் மனத்தை திறந்து சொன்னால் நீ காமத்தை அனுகியதிலிருந்த வெளிப்படைத் தன்மையும் கவிமையும் என்னை வாட்டியெடுத்தது என்றே சொல்ல வேண்டும். உன் காமத்தின்
கவிமைப் பற்றியே ஒரு பெருங் கடிதம் எழுதலாம். அவ்வளவு இருக்கிறது. அதை பின்னொரு நாள் எழுதுகிறேன். பருவமெய்திய நாளிலிலிந்து இன்றுவரை எனது கை களைத் தவிர வேறு கைகள் தீண்டியிராத என் பருவச்
செழிப்புகளை பருவத்தவிப்புகளை உன் எழுத்துக்கள் தீண்டி வருடி பெருகச் செய்து, "கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது " வீணான போது தான் தவிப்பு தாங்க மாட்டாமல் வந்து உன்னோடு பேசினேன். அன்று
தான் முதல் முதலாய் நானும் கவிதை என்று எதையோ கிறுக்கினேன்.
"இறுக்கி நசுக்கி கட்டிப்புரண்டு / காயப்படுத்திய என்னெஞ்சை கொன்றுவிடு விவரம் அறியா பேதை தான் நான் /ஆனாலும் மன்னிக்க மறுத்துவிடு கண்ணே! / காதல் கொண்ட குருதியெல்லாம் குற்றம் எழுந்து மனதை
பிசவுகிறது / புயல் கொண்ட தாகமாய் எனை வாட்டி வதைக்க உன் வரவால் மலர்ந்த இதயமெல்லாம் துடிதுடித்து தன்னுயிர் மாய்க்கிறது. " நினைவிருக்கிறதா இந்தக் கவிதை.? இதை அப்போது உனக்கு அனுப்பிய
போது" இறுக்கி" - யை" இருக்கி" என எழுதி அனுப்பி இருந்தேன். அப்போது அந்தப் பிழையை நீ சுட்டிக் காட்டிய போது கூட" வா இனி பிழைக்கவே பிழைக்காத படி இறுக்கி நசுக்கென்று"
இரட்டை அர்த்தில் பேசினேன். ஐ லவ் யூ டா கிறுக்கு பையா.
ஆற அமர அரங்கேறும் காமம் அத்தனை கவித்துமானதென்று நீ எழுதிய படியே நம் முதல் அந்தரங்கப் பொழுதில் நீ எவ்வளவு சேட்டைத் தனமாக நடந்து கொண்டாய். (டேய் கிறுக்கா தயவு பண்ணி இத வழக்கம் போல status எதும்
வச்சி தொலைச்சிடாத. நமக்குள்ள நடந்த ரொம்ப அந்தரங்கமான விசயங்களலாம் வேற எழுத தோனுது. எழுதவும் போறேன்.) ஆனா ஆளுக்கும் நீ பண்ற சேட்டைக்கும் சந்தமே இல்ல டா. நீ எப்போவோ அனுப்புன - நீ அறிமுகம் பண்ண
மஞ்ச பொடி தேய்க்கையிலே பாட்ட கேட்டு கேட்டு.. உன் நெனப்புல தவிச்சு போயி குளிக்கறப்போ கொஞ்சம் அதிகமா மஞ்ச தேச்சு அக்கா கிட்ட மாட்டிகிட்டேன் னு நான் எப்போ சொன்னேன். ஆனா நீ அத அன்னைக்கு வர நெனவு
வச்சிருந்து ரொம்ப மஞ்சள் பூசிட்டியா னு...... அது எப்படி டா.. நான் ரெண்டு கைல போடுற ஊக்க நீ ஒரு கைல கழட்டி மாட்டி விட்ட? இன்னைக்கு வரைக்கும் எனக்கு இதுக்கு பதில் சொல்ல ல. கேட்டா எல்லாம்
எக்ஸ்பீரியன்ஸ்னு உடான்சு வுடுவ. ஆனா நீ எழுதின போல "பின் பக்க ஊக்கு அல்லது பொத்தான் வைத்த ரவிக்கை, சுடிதார்.... (இன்ன பிற) அணியும் பெண் மனைவியாக அமையப் பெற்ற ஆண் பாக்கிய சாலி." தான்.
ஆனா ஒன்னு இதல மனைவி கூட காதலி கள்ளக் காதலியை யெல்லாம் சேர்த்துக்கோ. கூடவே அந்த இன்ன பிற ல ப்ராவையும் சேர்த்துகோ. அப்பறம் " மயிர் மழிக்காத உன் அக்குளில் சிக்குண்டு கிடைக்கிறது என் மனம்
" னு ஏன்டா எழுதுன.? என் உடம்பும் மனசும் என்னைய விட உன்னையும் உன் எழுத்தையும் தான் அதிகமா நெனைவு படுத்துது. உனக்கு பிடிச்ச தாலாட்டும் பூங்காற்று பாடல் ல வரத போல " எப்பொழுதும் உன்
சொப்பனங்கள் / முப்பொழுதும் உன் கற்பனைகள் / சிந்தனையில் நம் சங்கங்கள் / ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்/ காலையில் நான் பாடும் காதல் பூபாளம் /காதில் கேட்காதோ கண்ணா என்னாளும் /ஆசையில் நாள் தொழும் ஆலயம்
நீ... " னு ஆகிட்டேன் நான். சுயமைதுனத்தின் போதும் கூட எனக்கு நீயும் உன் நினைவும் தான் மேலெழுது. ஆனால் ஒன்ன மட்டும் மறுபடியும் சொல்லனும்.. ஏன் எத்தன தடவ வேணா சொல்லுவேன். உன்ன சந்திக்காத
வர.. உன்னோட ஒன்று கலக்காத வர நான் கேள்வி பட்ட.. முதல் கூடல் ல (பொதுவாகவுமே) ஆண்கள் காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி னு சொல்லப்படுவது உண்ணை தான் னு நெனச்சிருந்தேன். ஆனா அது அப்படி இல்ல னு நீ
காட்டிட்ட.
இன்னும், உன் கிட்ட இருக்க இந்த.. எடுக்கறவன விட கொடுக்கறவள உச்சிக் கூட்டி போற அவசரமில்லாத பொறுமையான காமமும், எறும்பு மாதிரி இருந்துகிட்டு யானையோட கம்பீரத்துக்கொப்பா எழுதுற தைரியமும் தான் டா
என்னைய கவுத்துடுச்சு. என்னடா காதலா கேட்ட இவ காமமா எழுதி கிட்டு போறாளே னு நெனைக்காத....உன் மேல அவ்வளவு காதல் இருக்கு.. அது உனக்கே தெரியும். ஏன் நீயே எழுதி இருக்கியே " காதலும் கவிதையும்
விளக்கிக் சொல்ல வேண்டிய விசயமல்ல. விளங்கிக் கொள்ள வேண்டிய விசயம்" னு.
அது எப்படினு தெரியல நானே தான் "உன்னிடத்திலும் "தாய்மை" "பெண்மை"" மென்மை "பேன்றான பல கழிசடைகளைத் தனங்கள் இருக்கிறது. அவைகளை கழட்டிவிட்டுவிடு. அது நீயும்
நானும் எதிர்நோக்கும் கால, காலாச்சார மாற்றத்திற்கு மிகப்பெரும் இடைஞ்சல்களே.... பெண்ணின் மார்பை ஆபாசமா பார்க்கல அழகாக்கி கவிதைவடிக்கிறேன் என்பதெல்லாம் நாம் பேசும் முற்போக்குக்கு மிகப்பெரிய
முட்டுக்கட்டை..." என்றெல்லாம் எழுதினேன். ஆனா உன்ன நெனைக்கறப்போ பாக்கறப்போ அது ஏதோ இனம் புரியாத பரவச உணர்ச்சி. ஒரு குழந்தைய ஏந்துறத போல உன்ன ஏந்திக்கனும், ஈரமே இல்லையா னு நீ திட்டுற அந்தக்
களியுருண்ட மார உனக்கு ஊட்டனும் னு தோனுது. பாரேன் இங்கயும் நீ சொன்னது தான உண்மை ஆகுது. " காதல்ங்கறது கூமுட்டைத் தனங்களின் கூடாரம். அது வந்த பிறகு அறிவு சிந்தனை எதும் வேலை செய்யாது. தன்னை
அப்படியே அந்த உணர்ச்சிக்கு அர்ப்பணிப்பணிக்கறத விட்டா வேற வழி இல்ல" போல.
ஆனா ஏன் இப்படி இருக்க கூடாது ""எமக்குஎன்று சொற்கள் இல்லை மொழி எம்மை இணைத்துக்கொள்வதுமில்லை உமது கவிதைகளில் யாம் இல்லை எனக்கென்று சரித்திரமில்லை நீங்கள் கற்றுத்தந்ததே நான்".
என்கிற இந்த கனிமொழி கவிதை மாதிரி? காலம் காலமா நீங்க அதான் இந்த ஆண் சமூகம் ஆதிக்க சமூகம் இது தான் பெண் இது தான் பெண்மை இது தான் காதல் னு கத்துதந்ந விசயமாத்தோட பாதிப்பா? நீ தான் சொல்லுவல்ல மனசு
னு ஒரு மசுரும் இல்ல. அது எல்லாம் நாம கத்து கிட்டு ஏத்துகிட்ட விசயங்களோட தொகுப்பு னு. ஆசக்காரா... ஆனா அப்டியே இருந்தாலும் நான் படிச்சு எல்லாம தெரிஞ்சு தெளிஞ்ச பிறகும் இந்தக் காதலும் காமமும்
என்ன இப்படி பாடா படுத்துது. இப்போ கூட நெனைச்சா நெஞ்சு விம்முது. ஆனா "கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல" தான இப்போ என் காமமும் காதலும்.
இருந்தாலும் நம் முதல் கூடலின் நினைவுகள் அவ்வளவு தித்திப்பா இருக்கு. அந்த நாளின் நினைவா என் கைப்பட உனக்கு ஒரு கவிதை எழுதி அனுப்புனேன் ல. (அது கவிதையானு கூட தெரில.) " உன் மார்பை தொட
நெருங்கிய என்னை - நீ தடுக்க.. நான் முகம் சுழிக்க.. பின் மீண்டும் என் கைகள் கொண்டு தொட சொல்கிறாய்....... பழம் நழுவி பாலில் விழுவது போல, வாய் நழுவி வாய் நழுவி நான்........ " இதையெல்லாம்
நான் தான் எழுதினேனா னு எனக்கே வியப்பா இருக்கு. உன் கூட பேசி பழகி கலந்து நானும் உன் போல தணிக்கைப் பண்ணாமலே எழுதி இருக்கேன். ஐ லவ் யூ. கண்ணாடியில பட்ட தண்ணிய போல வழுக்கி கிட்டு இறங்கி வந்து
" என் மனது பெரிதாய் பரந்து கிடக்கையிலே..சிறுபுள்ளியிலே சிக்கித்தவிக்கும் அந்ந சின்ன சின்ன கண்ணுக்கும்.... எதை எதையோ யோசிச்சு எது எதுக்கு வருந்தி எது எதையோ எழுதி கிறுக்கி புலம்புற
நெஞ்சுக்கும் உன் போல நிறைய எழுத்து உம்மா. போதும் ரொம்ப நெடுக எழுதிட்டேன். மீதிய அடுத்து எழுதிறப்போ எழுதறேன். இப்போதைக்கு கடைசியா ஒரு கவிதையோட முடிச்சுக்கறேன்.
"இறுக்கி பிடிக்க நெஞ்சம் கேட்கிறது என் அத்தனை அழுத்தத்தையும் தாங்கிட
பிறந்தவன் நீ மட்டுமே என்று...
காமம்என்று சொல்லிட எண்ணம்
இல்லை... காதல் தான் என்பதிலும் ஐயம் இல்லை...
கசக்கி பிழியும் காலம் அதற்கு காத்து கிடக்கிறேன்... காத்திருக்கும் நாள் அதனால் கசந்து கிடக்கிறேன்...
இரவில் நீ தொடுவதாய் எண்ணி
வெற்று மார்பு அழுத்துகிறேன்.
உள்ளங்கை மலர் போல
உன்னை ஏந்திக் கொள்ள தவிக்கிறேன்.
என் அந்தங்க முத்தம் நீ..
வா
ஒரு கோடி இரவுகள்
என் பெண்மைக்குள்
உன் ஆண்மை புகுத்தி கிடப்போம்.
- என்று தணியாத காதற் காமத்துடன் உன்.. (நான் பேர போட மாட்டேன் சாமி. நீ இதையும் எடுத்து status வச்சாலும் வச்சிடுவ. லவ் யூ டா காட்டுப்பயலே)
@07/04/2022
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...