Poem
April 9, 2022
கவிதை
SHARE

பொன்னுதாயி - பாமா., எதார்த்தத்தில் இருந்து விலகாமலே எதார்த்தத்தை - குறிப்பாக இந்தச் சமூகத்தின் ஆணாதிக்கத் தனங்களை கேள்வி க்குள்ளா க்கும் ஒரு எளிய பெண்ணின் கதை.
"கல்லையும் புல்லையும் கட்டி கிட்டு இம்புட்டு நாளா நாம்பட்டது போதும் " "பெத்தவாதான் பிள்ளைகள வளக்கனும் னு சட்டமா என்ன?" - என்கிற எளிய வார்த்தை
சம்மட்டிகளால் பெண் அடிமைத் தனத்தையும் இந்த சமூகம் ஆணை ஏற்றி வைத்திருக்கிற - "போலி"அரியனையையும் உடைத்து நொறுக்குகிறாள் பொன்னுதாயி. " ஒரு பொம்பளயா அடக்க
மாட்டாதவன்லாம் என்னய்யா ஆம்பள. இவனுக்கு மீச ஒரு கேடு " என்ற வசனத்தின் வழியே ஆண்மை என்பதே பெண்ணை அடக்கி ஒடுக்குவதே என்றும், பெண்ணை அடக்கியாளத் தெரியாதவன் ஆணில்லை
என்றும் " அவனுந்தான் எம்புட்டு நாளைக்கு ஒத்தக் கட்டையா கெடப்பான். பொம்ளையாச்சும் இருந்துருவா. ஆம்பளைக்கு இருக்க முடியுமா?" என்ற வசனத்தின் வழியே ஆணுக்கு
வழங்கப்படுகிற சுதந்திரத்தையும், பெண்ணின் காமத்தின் மீது இந்த சமூகம் கையாள்கிற அடக்குமுறையையும் போகிற போக்கில் சுட்டிக் காட்டி நகர்கிறது கதை. #கண்டிப்பாக_வாசியுங்கள்
❤️💙🖤
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...