Back

Poem

February 8, 2019

கவிதை

SHARE

கவிதை

#அன்பே_மருந்து..

வழக்கம் போல க்ளாஸ் இன்றும் இரண்டு ப்ரீயட்ஸோடு முடிந்தது. 10.15 க்கே. மதிய சாப்பாடு வேளை வரை மிச்சமிருக்கிற நேரத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் நானும் ஹென்றியும் ரெப்ரன்ஸ் செக்ஷன்
க்குள் நுழைந்தோம். லைப்ரரி இன்சார்ஜ் என்னிடம் ஐடி கார்டை கேட்டார்.லேடி தான். ஒரு நாற்பது வயதிருக்கும். சாந்தம் தாண்டவமாடும் வட்ட முகம். நெத்தியில கொஞ்சமாய் சந்தனம். வெள்ளை பூ போட்ட ஸ்கை புளு
கலர் சேலை. டார்க் ஸ்கை புளு கலரில் ரவிக்கை.
நான் ஐடி கார்ட் இல்லை என்பதற்கு அறிகுறியாய் தயங்கினேன்.
"ஐடி கார்டு வேணுமேப்பா. உங்க கிட்ட இருக்கா? " என ஹென்றியை பார்த்து கேட்டார்.
"ஆங் இருக்கு" என பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஐடி கார்டை எடுத்து காட்டினான். "அடுத்த தடவ வரும் போது எடுத்து கிட்டு வந்துடுங்க" என என்னை பார்த்து சொல்லி இருவரையும் அலௌ
பண்ணினார்.
போய் இருவரும் எதிர் எதிரே ஆளுக்கொரு சேரில் உட்கார்ந்தோம். அவன் தினசரிகளை புரட்டிக் கொண்டிருந்தான். நான் விகடனில் என் கவிதை ஏதேனும் பிரசுரமாயிருக்கிறாத என தேடிக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேரம்
புரட்டலாகவே போனது. என் கவிதை எதுவும் பிரசுரம் ஆகவில்லை. ஹென்றி போகலாம் என சைகை காட்டினான். என்ட்ரி நோட்டில், நான் தமிழிலும் அவன் இங்க்லீஷிலும் கையெழுத்திட்டு விட்டு இருவரும் அவரவர் நோட்டை
எடுத்துக் கொண்டு வெளி வந்தோம். எங்களுக்கு இடது புறத்தில் லைப்ரரியை விரிவுபடுத்துகிற வேலை நடந்து கொண்டிருந்தது. அந்த ஒரு கட்டிடத்தை விரிவு படுத்துவதற்காக ஆறு மரங்களை வெட்டி விட்டார்கள். இப்போது
அந்த இடமே ஏதோ வழுக்கை தலையை போல அசிங்கமாய் தெரிந்தது. நல்ல சமுதாயம். நானும் அவனும் வலது புறமாய் திரும்பி ஹாஸ்டலுக்கு போக புறப்பட்டோம்.
"தமிழ வளர்க்ற போல" எனச் சிரித்தான். நான் எதையோ யோசித்து கொண்டு "ஆமாம்" என்பது போல தலையாட்டி விட்டு நடந்தேன். என்னோடு அவனும் நடந்தான்.
"டேய் நான் drawing பண்ணேண் டா" என நோட்டை திறந்து மீசையையும் மூண்டாசையும் வைத்து பாரதி தானென அடையளாப் படுத்திக் கொள்ள முடிகிற ஒரு" நீல மை" ஓவியத்தை காட்டினான்.
"செம டா. நல்லா இருக்கு. இந்த கலையும் அன்பும் தான் டா வாழ்க்கைக்கும் வாழ்றதுக்கும் ஆதாரமாவே இருக்கு"
லேசா புன்னகைத்தான். எப்போதும் அந்த ரோட்டில் பெண்கள் நடமாட்டம் அதிகாயிருக்கும். நாங்கள் போன நேரம் பார்த்து யாரும் இல்லை. ரோட்டின் இரு மருங்கிலும் மரங்கள் மட்டும் உயர்ந்து நின்றன. வானம்
மந்தமாயிருந்து. மார்கழி மாசம் என்பதால் காற்றில் பனியின் ஈரப்பதம் இருந்தது.வெயில் இல்லை.நல்ல கவித்துமான சூழல்.
"நேத்து பஸ் ல வரும் போது பக்கத்தில ஒரு வயசான பெரியவர் உட்கார்ந்து ட்டு இருந்தாரு. நல்லா ஐயர்ன் பண்ண சட்ட பேண்ட். கைல ஒரு அரப் பவுனுக்கு தங்க மோதிரம். நல்ல அந்தஸ்தான ஆளு மாதிரி
இருந்தாரு" என நேற்று ரயில்வே ஸ்டேஷன் வரை போய் வரும் போது நடந்த கதையை சொல்லத் தொடங்கினேன். அவன் " ம் " கொட்டுதல்
"தலையசைத்தல்" ஆகிய கதைக் கேட்பதற்கான பாவங்களை பண்ணிக் கொண்டு நடந்தான். நான் கதையை தொடந்தேன்.
" எங்க தம்பி ஏறங்கனும் னு என் கிட்ட பேச்சுக் கொடுத்தாரு. அப்போ தான் நான் வாட்சப் ல 'அன்பே மன முறிவுக்கு மருந்தாகிறது'னு ஸ்டேட்டஸ் போட்டேன். மனுசன் அத பார்த்துட்டு ஆரம்பிச்சாரோ
என்னவோனு தெரியல. லாலி ரோடு னு சொன்னேன். உடனே ஜி. சி. டி லயா படிக்றிங்க னு கரக்கெட்டா கேட்டுட்டார். ஆமா னு சொன்னேன். நான் பொறந்து வளர்ந்தது படிச்சது லாம் இங்க கோயமுத்தூர் தான். ரயில்வே ஸ்டேஷன்
ல கூட எனக்கு ஒரு டேக்ஷி ஓடுது. ஆரம்பத்தில டேக்ஷி ட்ரைவரா இருந்தேன். இப்போ சொந்தமா ஐஞ்சு டேக்ஷி ஓடுது. டேக்ஷி ட்ரைவரா இருந்து நெறய பேர சந்திச்சிட்டதால யாரா பார்த்தாலும் எந்த ஊரு னு சட்டுனு
கண்டு புடிச்சிடுவேன். பார்த்தாலே தெரியுது படிக்ற பையன் னு. இதே கேரளா காரனா இருந்தா தோள் பட்டைய அசைச்சு பேசுவான். திருநெல்வேலி, மதுர பக்கத்து ஆளுங்கனா பேச்சில இருக்ற திமிர வச்சு கண்டு
பிடிச்சிடலாம். ஆமா நீங்க எந்த ஊரு தம்பி.
"May.ட்டூர் ங்க ஐயா. நீங்க"
"இங்க தான் வடவள்ளி ல வீடு. மேட்டூர் வந்திருந்தேன். இப்போ டேம் நிறைஞ்சப்போ. பார்த்துட்டு போலாம் னு. அம்மா அப்பா லாம் என்ன வேல பண்றாங்க.? வீட்ல கூட பொறந்தவங்க எத்தன பேரு? என்ன பண்றாங்க
"
வயசாகி போனப்றம் கை, கால போல வாயும் நிற்கறதே இல்ல. அசைஞ்சு கிட்டே இருக்கும் போல. நிறைய பேசினாரு டா. மரம் முத்தினா சேவு மனுசன் முத்தினா கொரங்கு. குரங்கு கம்முனா இருக்கும். ஏதாவது சேட்ட பண்ணிக்
கிட்டே இருக்கும் தான. அவரும் அப்படி தான். நான் இறங்குற வரைக்கும் பேசி கிட்டே வந்தாரு..."என நிறுத்தி ஒரு லாங் ப்ரீத் எடுத்து கிட்டேன்.
ஹென்றி "களுக்" னு சிரிச்சிட்டான்.
"சிரிக்காத டா. அன்பு இல்லாம என்ன இருந்தும் பிரயோசனம் இல்ல டா. "என கதையை தொடர்ந்தேன். அவன் பழைய படி கதை கேட்பதற்கான பாவங்களை தொடர்ந்து கொண்டே நடந்தான். இதற்குள் நானும் அவனும் பவர்
ஹவுஸ் திருப்பத்தை நெருங்கி இருந்தோம். எங்களுக்கு நேர் எதிரே ஹாஸ்டல். கொஞ்சம் தூரம் தான். நான் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து கதையை தொடர்ந்தேன்.
"அவருக்கும் எங்க வீட்ல இருக்றத போலவே. ஒரு பொண்ணு ரெண்டு பசங்களாம். எல்லோருமே முதலாளிகளா இருக்காங்களாம். காந்தி பார்க் கிட்ட பஸ் திரும்பும் போது இங்க தான் இளையவன் இருக்கான். பெரியவன், நான்
இருக்க வீட்டு மாடில குடி இருக்கான். பெரியவன் வடவள்ளி ஆலமரத்து ஸ்டாப்ல தான் கம்பெனி வச்சிருக்கான். இந்த கம்யூட்டர் லாம் வைக்ற டேபிள் தயாரிக்ற கம்பெனி. இவ்வளவு இருந்து என்ன பண்றது. நல்லா
இருக்கியா மாத்திர போட்டியா சாப்டியா னு கூட கேட்கறதில்ல..னு சொல்லி கிட்டே மனுசன் அழற மாரிதி ஆகிட்டாரு. அந்த முகத்துலயும் குரல்லயும் அவ்வளவு ஏக்கம் டா. அன்புக்கு. பாவம். இடைல அவருக்கு போன்
வந்தது. காது கேட்கல. நான் தான் சொன்னேன். போன் அடிக்குது னு. பேசிட்டு வந்து சொன்னாரு. பெரிய பையன் செல் ல இருந்து தான் போன். என் மனைவி. என்ன வேல னாலும் மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு
போய்டுவேன். இன்னைக்கு கொஞ்சம் நேரமாகிடுச்சு. அதான் சாப்டிங்களா கேட்க போன் பண்ணிருக்கு. வீட்டு வரி கட்ட போயிருந்தேன். கொஞ்சம் நேரமாகிடுச்சு. மதியம் அங்கயே சாப்டுட்டேன். வெஜ் பிரியாணி. அவள
கல்யாணம் பண்ணி ஏறத்தாழ நாப்பது வருசம் ஆகுது. இன்னும் அந்த பழைய பாசம் குறையல. தாய்க்கடுத்து தாரம் னு சும்மாவா சொன்னாங்க. என் அம்மா அப்பா க்கு அப்பறம் என் மனைவி தான் தம்பி அன்பா இருக்கு. அவங்க
மட்டும் இல்லனா நான் எப்பவோ செத்தழிஞ்சு போயிருப்பேன் னு சொல்லி கிட்டு வந்தவரு என் பேர கேட்டாரு. அஜித் னு சொன்னேன். அவரு பேரு மார்கோஸாம்.
அப்பறம் இத மட்டும் ஞாபகத்துல வச்சுகோ "அம்மா.. அப்பா வ பத்ரமா பார்த்துக்க தம்பி. எல்லா நேரத்துலயும் இல்லாட்டியும் தீபாவளி பொங்கல் வரும் போதாவது அவங்களுக்கு புடிச்ச வேட்டியோ சேலையோ
எடுத்துக் குடு. கூலி வேல செஞ்சு உன்ன இவ்வளவு தூரம் அதுவும் பேரூ சொல்ற.. நல்ல காலேஜ் ல படிக்க வைக்றாங்க ல்ல. நாளைக்கு மனைவியே வந்தாலும் அவங்கள மறந்திட கூடாது. அவங்க கிட்ட அன்பா இருக்கனும்
" னு அவரோட ஏகக்கத்த, இல்லாமைய, அவங்க மகனுங்க அவருக்கு பண்ணாதத எனக்கு அட்வைஸா சொன்னாரு. அன்பு தான் டா எல்லாத்துக்கும் மருந்து" என கதையை நிப்பாட்டினேன்.
"அட போடா,சின்ன வயசுல நல்லா படினு சொல்றாங்க, படிச்சு முடிச்சபறம் நல்ல வேலைக்குப் போ, சம்பாதிங்றாங்க, அப்றம் வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சா இப்போ அன்பு காட்றதில்ல பேசறதில்ல னு
சொல்றாங்க " என ஹென்றி அவரை குறை சொன்னான்.
" டேய், எப்பவுமே எல்லார்க்கும் அன்பு தேவை டா, இப்போ வீட்ல இருக்றப்போ என்ன வேல இருந்தாலும் அம்மா நம்ம கிட்ட "சாப்டியா, சாப்டுறியா" னு அன்பா கேட்கறதால தான் வீடு வீடா இருக்கு.
அன்பு இல்லாம யாராலும் இருக்க முடியாது. "
"..... (லேசான புன் முறுவல்) " - ஹென்றி.
" காசு பணம் எதும் இல்லாம கூட இருந்திட முடியும். ஆனா, அன்பு இல்லாம முடியாது. அவருகிட்ட அன்புக்கு அத்தன ஏக்கத்த பார்த்தேன் டா. கடைசியா இறங்கறதுக்கு முன்னாடி அவர் போன் நம்பர வாங்கிட்டு
வந்திருக்கேன். போய் போன் பண்ணி பேசனும். "
அவன் என்னை பார்த்து, பெரியதாய் ஒரு வெள்ளைச்சிரிப்பு சிரித்தான். இதற்குள் ஹாஸ்டல் வந்திருந்தது. நான் ரூம் நம்பர் 471 ஐ நோக்கியும், அவன் 494 ஐ நோக்கியும் நடந்தான்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...