Poem
July 12, 2018
கவிதை
SHARE

❣️ முதல் பார்வையில் அன்பையும்
மறு பார்வையில்
மன்மத திரவத்தையும் தெளிக்கிறாய்.
❣️ அனுமதி இல்லாமலே அங்கமெங்கிலும்
கைகளால் ஊர்வலம் போகிறாய்.
❣️ அவிழ்ந்தலையும் கூந்தலால் மோதி என்னில்
மோகத்தை கிளர்த்துகிறாய்.
❣️ மின்னுகிற மூக்குத்தியால்
கண்ணொளியை பறித்து
உன்னை மட்டும் பார்க்க முடிகிற
குருடானாக்கி விடுகிறாய்.
❣️ மாமா என்று சொல்லி
மாமிச உடலுக்குள் ஹார்மோன் கடலோடச் செய்கிறாய்.
❣️ காதோரம் கிசு கிசுத்து
கழுத்தில் முத்தம் வைத்து
எச்சிலால் ஈரப்படுத்தி
என்னை முழுதும் உன்னுடைமையாக்கிக் கொள்கிறாய்.
❣️ இந்த போதை போதாதென
மார் முகட்டில் முத்தம் கேட்டு
கள்வெறியேற்று கிறாய்.
❣️ பின்னழகால் என்னில் பித்தேற்றுகிறாய்.
❣️ ஆடைகள் களையாமலே
என்னை புணர்ந்து விடுகிறாய்.
❣️ இராவானால் இரத்தச்சிவப்பேறுகிற
இதழ்களை காட்டி
எனக்கு இரத்த ஆசை தூண்டுகிறாய்.
❣️ குட்டி முலை நசுங்க கட்டி பிடியென
கண்களால் சொல்லி
காம கீதம் இசைக்கிறாய்.
❣️ அன்பிலும்.. இப்படித் தான்
என்னை என்புருக்கி விடுகிறாய்.
❣️ ரத்தம் சுண்ட சுண்ட
நேசித்து தொலைக்கிறாய்.
❣️ உன்னன்பில் பாதியை கூட
காட்டாமல் இருப்பது
உறுத்தலாய் தான் இருக்கிறது.
❣️ அதற்கென்று அன்பை குறைத்து விடாதே.
நிறைய நேசி.... கடலளவு... மலையளவு.. வானளவு.
நீ எவ்வளவு நேசித்தாலும் போதாதெனத் தான் சொல்வேன்.
அலுத்துக் கொள்ளாமல் அன்பு செய்.
அன்பு வெள்ளத்தில் என்னை முழுக்கு.
அதில் கரைந்து போகட்டும்
என் ஆத்மாவின் அழுக்கு.
❣️ என்னை நேசத்தேவையில்லாதவனாய் ஆக்கு.
என் மோச காலத்திலும் பாசம் செய்.
உன் அன்பென்ற மருந்தால் மனநோய் போக்கு.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...