Poem
June 13, 2018
கவிதை
SHARE

அன்புள்ள சகி.. நீ நேசக்கடல். உன்னை கடப்பது அரிது . எல்லாப் பொழுதிலும் என்னை நீ முழுக்கடித்து விடுகிறாய்.நானும் உன்னில் மூழ்கி திளைக்கிறேன்.உன்னில் நான் தீண்டாத,
பார்க்காத இடம் என்றால் உள்ளுறுப்புகள் தான் மிச்சப்படும்.நம்மிதழ்கள் பேசிக் கொண்டதை விட முத்தமிட்டு கொண்டது தான் அதிகம்.ஆமாம் எப்போதுமொரு ஆன்ம நெருக்கத்தை
உணர்த்துகிறாய்.என் சகலத்தையும் அசைத்து பார்க்கிறாய்.என் முழுதிலும் நீ நிரம்பி வழிகிறாய். முன்பு பதில் நேசம் கூட செய்ய பயந்தவன் இப்போது முழுநேரமாய் உன்னை காதலிக்க
தொடங்கி விட்டேன். காண்கிற எதிலும் உன்னை அல்லது உன் சாயலை தேடுகிறேன்.சில நேரம் திருவிழாக் காலமென கொண்டாடுகிறேன்... இன்னொரு நேரம் பேய் பூதமென விரட்டி அடிக்கிறேன்.
இப்படியே விரட்டிக் கொண்டிருப்பதால் போய்விடுவாயோ என்று பயமாகவும் இருக்கிறது. ஆனால் எப்போதும் உன்னோடு சண்டை கட்டி சமாதான சந்தோசத்தை அனுபவிக்கவே பார்க்கிறேன்.
எப்படியாயினும் நீயற்று கழிவதெல்லாம் என் வாழ்வின் துக்க நாட்கள்.ஏன் செத்த நாட்கள் என்றே சொல்லலாம் .அடிக்கடி உன்னை விரட்டி வர வைத்து, நீ மாறாமலும் என்னை வெறுக்காமலும்
இருக்கிறாயா என பரிசோதித்துக் கொள்கிறேன்.அவ்வளவே.சகி, நீயும் நான் விரட்ட விரட்ட தாயை தொடர்கிற பிள்ளை என அழுது கொண்டேகூட என்னை தொடரத் தான் செய்கிறாய். ஒரு பொழுது உன்னோடு
பேசாமல் இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு துக்க அனுஷ்டிப்பு. சகி, நான் மட்டுமே பார்க்கவும் தீண்டவும் முடிகிற என் பாலுறுப்பென உன்னை என்னை தவிர யாரும் எதுவும் செய்து விட கூடாதென
நினைக்கிறேன். Possessiveness ன் உச்சம் தான். உன்னை என் கட்டுக்கொள்ளடைக்கிற எண்ணம். இந்த எண்ணத்தை அமுக்கி புதைத்து கொல்ல முயற்சிக்கிறேன். என்ன செய்வது எப்போதேனும்
எதாவதொரு சமயத்தில் தலை தூக்கிக் கொள்கிறது. எங்கு என் கட்டுபாடு மீறி உன்னிடம் உளறி விடுவேனோ என்ற அச்சப்பொறி விழும் போது தான் என்னுள் உன்னை பிரிதலுக்கான புகைச்சல்
ஆரம்பிக்கிறது. . ஆனால் இதை சொல்லாமல் உன்னோடு இருக்க பார்க்கிறேன். முடியவில்லை. தப்பியோ தவறியோ சொல்லிவிடக் கூடும் என பயந்தேன். பயந்தது போல் சொல்லியும் விட்டேன். நீ
இதற்கும் சம்மதம் தான் சொல்வாய். ஆனால் எனக்கு தான் குத்தலும் குடைச்சலுமாய் இருக்கும். இது போல் உன்னொவ்வொரு சுதந்திரமாய் பறித்து விடுவேன் எனக் கூட தோன்றுகிறது. ஆனால்
நீயும் உன் அன்பும் இல்லாமல் இருப்பது ஏதோ இழக்கக் கூடாத ஒன்றை இழந்து விட்டதை போல வேதனையாகவும் வெறுமையாகவும் தான் இருக்கும். கடந்த சில நாட்களாக அப்படித்தான் இருக்கிறது.
முகமெங்கிலும் அகமெங்கிலும் வெறுமையின் உக்கிரத்தை உணர்ந்தேன். ஆனால் பாவம் நீ. படாத பாடு படுத்துகிறேன். எப்போதும் போலத் தான் போய் வருகிற வாடிக்கையை தான் இந்த முறையும்
செய்வேன். நிச்சயம் வருவேன். தயவு செய்து என்னை நிராகரி. கொஞ்சம் காலம் உன் இல்லாமை வலிக்கத் தான் செய்யும். காலப்போக்கில் பழகி விடும் என்று நினைக்கிறேன். இனி நமக்குள்
எதுவும் வேண்டாம். உன் சகல சுதந்திரத்தையும் சாம்பலாக்க பார்க்கிறேன். உன் ஒளி சூழ்ந்த உலகினை இருளாக்க பார்க்கிறேன்.இந்த பரந்த வெளி எங்கிலும் பறந்து திரிதலுக்கான சிறகுகளை
சிநேகக் கத்தியால் அறுக்கப் பார்க்கிறேன்.இந்த பரிபோதல்களை தாங்கி கொண்டு தான் என் காதலை சம்பாதிக்க வேண்டுமென்பதில்லை. போ. போய்விடு.நான் நெருங்க வியாலாத தொலைவு.. என்
பார்வையிலிருந்து தொலைகிற தொலைவு என் தேடுதலுக்கும் அகப்படாத தொலைவு போ.. போய்விடு. சுதந்திரமாய் இரு. இப்படி சொல்கிற மனது தான் இதுக்கெல்லாம் சமாதனம் சொல்லியோ அல்லது
ஒப்புதல் சொல்லியோ என்னோடு இரு என்கிறது. என்னை விட்டு போய்விடாதே என்று புலம்புகிறது.சகி நீயே என் உதய அஸ்தமனம் நீயே என் இரவு பகல். நீயே என் ஆதி அந்தம். நீயே என் சூரியனும்
நிலவும். நீயே என் உடம்பும் உயிரும். என்னை பிரியாதே சகி.ஆணுக்கு பெண் துணை அவசியம் என்பார்கள். எனக்கு வேறெந்த பெண் துணையும் வேண்டாம். நீ போதும். நீ மட்டிலும் போது. சகி
உன் அன்பை பன்மடங்காக்கு. அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சென்பர். அமுது வேண்டுமானால் நஞ்சாகலாம். அன்பு எப்போதும் அன்பு தான். அதனால் பயமின்றி ஒரு பேரன்பை நிகழ்த்து.
அள்ளக் குறையாமல் அன்பு செய் சகி.எந்நாளும் என்ன ஆனாலும் என்னை பிரியாதே சகி. உன்னை பிரிந்தால் நான் ஊனப்பட்டு போவேன். உயிருள்ள சடமாகி போவேன்.வாழ்ந்து கொண்டே தினம் தினம்
செத்து கொண்டிருப்பேன். என்னுள்ளும் புறமும் நீயாகி போ. சகி என் வெறுப்பு நிலையிலும் அன்பு செலுத்தென்றேன்.ஆனால் எப்போதேனும் உன்னை வெறுத்திருக்கிறேனா? சொல் சகி சொல். உயிரை
உடல் எப்படி வெறுக்கும்.? வா சகி .நீயே என் வாசுகி. என் தாயாகு. என்னாலும் தாயாகு. நீ ஈன்றெடுக்கும் குழந்தைகளோடு இந்த குழந்தையையும் கொஞ்சு.கடைசியாய் மீண்டும் ஒரு முறை
நினைவு கூர்கிறேன். சகி என்னை பிரியாதே. நீயின்றி போனால் நான் ஊனப்பட்டு போவேன். உயிருள்ள சடமாகி போவேன். என்னை நீங்க மாட்டாய் என்ற நம்பிக்கையில் "உன் சிநேக
பிச்சைக்காரன்"
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...