Back
Poem
May 21, 2018
கவிதை
SHARE

பாடையாகும் கட்டில் மேல
ஆடை களைந்து அவளுடலில்
தாடை நோக முத்தமிட்டு
கோடை வெயில் சுட்டெரித்தேன் - உடலில்
மேடையிட்டு சுகம் படித்தேன்.
வஞ்சி மகளவள்
கஞ்ச இடை மேல
பஞ்சென பருத்து நின்ற
நெஞ்ச மேட்டிடையில்
மஞ்சம் அமைத்து படுத்தேன் - அதிலே
கொஞ்சமாய் சுவைத்தேன் சுடுதேன்.
வளமை பூண்ட உடலில்
இளமை இருந்த மட்டும்
கிழமை பாராமல்
கிளத்தி அவளோடு
நலமாய் களித்தேன் - உடல்
நலமதை அழித்தேன்.
ஓடை ஓடும் நீரெனவே
ஓடி வந்த காம ரசம் வற்றி
தாடி முடி நரைத்து
நாடி வேகம் குறைந்து விட
பாடி நின்றேன்- தேவனை
நாடி சென்றேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...