Back

Poem

March 28, 2018

கவிதை

SHARE

கவிதை

💞காலை எழுவதானாலும்
கடைத்தெரு போவதானாலும்
பசிக்கு உண்பதானாலும்
படுத்து உறங்குவதானாலும்
உன்னோடு அல்லது
உன் சம்மதத்தின் பேரில் செய்ய வேண்டும்.

💞ஒருவரும் இல்லாத
வனாந்தரமொன்றில்
இருவருமாய் இறுக கையோர்த்து
மாதம் ஒருமுறேயேனும் உலாவ வேண்டும்.

💞முத்தங்கள் நூறு தந்தாலும்
அர்த்த அடர்த்தியும்
அன்பின் கிளர்ச்சியும்
மிகுந்த கவிதை யொன்றை
மிருதுவான உன் உதடு களால்
எனக்காக என் காது கேட்க
நீ வாசிக்க வேண்டும்.

💞ஒரே நாளில்
இரண்டாவது தேநீர் கேட்டால்
சத்தம் போட்டு பேச்சை நிறுத்து
அல்லது
முத்தம் கொடுத்து என் மூச்சை நிறுத்து.

💞ராத்திரியிலோ பகலிலோ
அது எந்நேரமானாலும்
சாப்பிடாமல் இருந்தால்
கூப்பிட்டு வைத்து
நான்கு அறை கொடு.

💞கோபித்து கொண்டால்
கொஞ்சமாய் கொஞ்சு.

💞ஐ லவ் யூ வை தவிர்த்து
ஆசை வார்த்தைகள் பேசு.

💞எப்போதும்
என்ன ஆனாலும்
என்னோடு பேச மறுக்காதே.

💞எந்த கணத்திலும்
நான் என்ன செய்தாலும்
என்னை வெறுக்காதே .
என் இதயத்தை நறுக்காதே

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...