Back

Poem

October 4, 2017

கவிதை

SHARE

கவிதை

#சிறுகதை. #நவீன_சிலப்பதிகாரம். "கண்ணு இப்போ நீ கல்யாணம் வேணாம் னு சொன்ன உடனே உன்ன உன் இஷட்ட படியே விட்டுட்டேன். ஏன்னா எனக்கு உன் மேல நம்பிக்கை சாஸ்தி. அத
காப்பாத்து வனு நம்புறேன். இல்ல நீ வேற சாதிக்கார பையன கியன காதலிக்றது னா முன்னாடியே சொல்லு எதுக்கு நீ காதலிச்சு கல்யாணம் பன்னிகிட்டு வந்தப்றம் உன்னையும் கொன்னு அந்த
பையனும் கொன்னு நீ செத்த தூக்கத்துல நாங்களும் செத்து எதுக்கு இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலம முன்னாடியே சொல்லிட்டன ஒரு கால் லிட்டர் பால்டாயிலோட முடிஞ்சிரும் குடும்பத்தோட
குடிச்சிட்டு செத்துடலாம். என்ன சொல்ற " "அப்பா நான் உங்க பிள்ள ப்பா உங்களுக்கு பங்கம் வர மாதிரி நடந்துக்க மாட்டேன் என்ன நம்புங்க ப்பா. இப்போ நான் படிக்கனும்.
அவ்வளவு தான் படிச்சு முடிச்சப்றம் எங்க கழுத்த நீட்ட சொல்றிங்களோ அங்க கழுத்த நீட்றேன்" இப்படி பேசின நானா இப்படி பன்றேன். அவன் என்ன விட இரண்டு வயசு இளையவன்.இத விட
அவன் வேற சாதி நான் வேற சாதி. எப்படி.? இப்போ அவனையும் விட முடியல அப்பா கிட்டயும் தைரியமா போய் பேச முடியல. அவ்வளவு தெளிவா இருந்தா நான் எப்படி அவன காதலிச்சேன்? அப்பா வும்
அம்மா வும் என் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தாங்க அதை எல்லாம் வீணாக்கிட்டேனே... எவ்வளவு தூரம் அவன் கிட்ட சொன்னேன் எங்க வீட்டுக்கு லவ் லாம் பிடிக்காது னு கேட்டானா உடனே
பேசாம இருந்துட்டான்.. ஏன் ஒரு ப்ரெண்ட்ஆ பேசிருக்க கூடாதா.. ஆமா அவன் பேசுலனா எனக்கென்ன எனக்கு எங்க போச்சு புத்தி என்னைய சொல்லனும் அவன காதலிச்சு நான் தான் அவஸ்தை படுறேன்
அவனுக்கென்ன ஆனா ஊனா சண்ட போட்டுட்டு விட்டு போக பார்ப்பான். "ஏய் நீ ஆரம்பத்திலயே சொன்ன இல்ல லவ் லாம் வேணாம் னு நான் தான் கேட்கல.. வேணாம் நான் லாம் உனக்கு செட் ஆக
மாட்டேன் ஐ எம் நாட் எ குட் ஃபேர் பார் யூ(I m not a good pair for you.) " " இத தான் டா நான் முதல் ல யே சொன்னேன். அப்போலாம் கேட்காம இப்போ வந்து வேணாம் சொல்ற.
நான் என்ன விளையாட்டு பொம்மை யா நீ வேணும் னா எடுத்து வச்சுக்றதுக்கும் வேணாம் னா தூக்கி போடுறதுக்கும் " " புரிஞ்சிக்கோடி எனக்கு நீ வேணாம் னு சொல்லல உனக்கு நான்
வேணாம் னு சொல்றேன் " " புரியல" "உனக்கு நான் எந்த வகையிலயுமே பொருத்த மில்ல டி. நீ வேற சாதி நான் வேற சாதி. அதுமட்டும் இல்லாம நான் உன்ன விட சின்ன பையன்
வேற. எப்படி உங்க வீட்ல ஒத்துப்பாங்க. ஏற்கனவே உங்க அப்பா வேற செத்துடலாம் அப்டி இப்டி சொன்னாரு ன்ற. வேணாம். " " வேணாம் வேணாம் னு தான் டா நானும் சொன்னேன். அப்போ
எல்லாம் அப்படி பேசிட்டு இப்போ என்னமோ நல்லவன் மாதிரி பேசுற. இங்கு பார் எங்க அப்பா ஒத்துக்றாரு ஒத்துக்கல அது ரெண்டாம் பட்சம் என்னால லாம் உன்ன மறக்க முடியாது இன்னும்
ரெண்டு வருஷம் நான் படிச்சு முடிச்சிருவேன். அதுக்குள்ள நீயும் படிச்சு முடிச்சிருவா.. அப்பறம் எதாவது வேலை யோட வந்து பொண்ணு கேளு நானும் வீட்ல பேசறேன். என்ன? " "
ஏய்.... " " இந்த ஏய் ஊய் ன்றதெல்லாம் வேணாம் எனக்கு நீ வேணும்...ஒரு வேல எங்க அப்பாக்கு நான் பன்னது பிடிக்காம என்ன கொன்னு போட்டுட்டாருனா நீ யார வேணா கட்டிகோடா
ஆனா இப்போ நீ வேணும் உன்ன எனக்கு ஏன் இவ்வளவு பிடிச்சது னு தெரியல ஆனா ரொம்ப பிடிக்கும் டா ப்ளீஸ் என்ன விட்டு போகாதடா " இப்படியெல்லாம் மெரட்டி உருட்டி கெஞ்சி மிஞ்சி
இத்தன நாளா அவன் என்ன தவிர யாரையும் பார்க்க மாட்டான்ற நம்பிக்கை ல தான் என் வீட்டு நிலம அப்படி இருந்தும் அவன லவ் பன்னேன். ஆனா இன்னைக்கு அவன்... எ.... என்... ன்ன சொல்றான்
அழுகையா வருது " ஐ லவ் ஹெர்(her) "ஆம் அவ எதோ சொன்னாலாம் இவன் உருகிட்டானாம்... அப்பறம் எதுக்கு என்ன லவ் பன்னானாம் நான் வேணாம் னு சொல்லியும் கேட்காம ஏதேதோ பேசி
என்ன ஏமாத்திட்டு இப்போ எவளயோ ஐ லவ் ஹெர் னு சொல்றான்.... ஐயோ மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு... பேசாம இந்த பஸ் ல இருந்து வெளில குதிச்சிடலாமா னு தோனுது ஆனா சாகவும்
முடியல. ஆம்பிளைங்களே இப்படி தானா. அவன நான் ராம ன போல ஏக பத்தினி விரதமா இருக்க சொன்னேன். அவன் அடிக்கடி எவ எவளயோ பாத்துட்டு வந்து அவ கண்ணு அப்படி மூக்கு அப்படி என்னென்னமோ
சொல்வான். அதை எல்லாம் அப்போ ஒரு பொருட்டா எடுத்துக்கல. எடுத்துக்கவும் தோனல.ஏன்னா அவன் யார பார்த்தாலும் என்ன மட்டும் தான் லவ் பன்றான்ற தைரியம். ஆனா இ... இ... இ.... இப்போ
யாரையோ லவ் பன்றானாமே... பன்றதையும் பன்னிட்டு நான் கண்ணகியாம்.. அவ மாதவியாம்.... அப்போ அவன் கோவலனா.... என் வாழ்க்கை என்ன நவீன சிலப்பதிகாராமா? இல்ல... இது சிலப்பதிகாரம்
ஆகனும் னா அவன் சாகனும் அப்ப தான் இது சிலப்பதிகாரம் ஆகும் அவன் என்ன கட்டிகிட்டா தான அந்த பொண்ணு மாதவி... நான் அவன ஏத்துகிட்டா தான நான் கண்ணகி... அவன் எதுக்கு சாகனும் அவன
காதலிச்சதுக்கும் ஏமாந்ததுக்கும் எங்க அப்பா அம்மா க்கு நம்பிக்கை துரோகம் பன்னதுக்கும் நான் தான் சாகனும்... நான் சாகறது தான் சரி. (டொய்ங்க்) வாழ தான் முடியல னு பார்த்தா
நிம்மதியாய சாகவும் விட மாட்டேன்றானே. "ஏய் ஏதாவது பேசு டி நீ வேணாம் நான் அவளையே கட்டிக்றேன் னா சொன்னேன்... அவ அப்படி சொன்னதும்.. ஏதோ தோனுச்சு.. இந்த காலத்துலயும்
இப்படி ஒரு பொண்ணு இருக்க முடியுமானு தோனுச்சு அதத் தான் ஐ லவ் ஹெர்(her) னு சொன்னேன்.எப்பவும் ஐ லவ்..... யூ தான்டி" "அழறதா சிரிக்றதா முன்ன ஐ லவ் ஹெர்(her) னு
சொன்னான் இப்போ ஐ லவ் யூ னு மெசேஜ் பன்றான். அதுவும் எப்பவுமாம் அப்றம் இடையில அவள லவ் பன்னது யாரா இருக்கும்..." இப்படி பேசுற உள் மனசு தான் "டேய் என்னமோ போடா ஐ
லவ் யூ டா நீ எனக்கு வேணும் டா என்ன விட்டு போகாதடா... நான் வெறும் வாய் வார்த்தையா ஐ லவ் யூ சொல்லல டா எப்போ உன்ன லவ் பன்ன ஆரம்பிச்சனோ அப்பவே நீ தான் என் புருசன் னு முடிவு
பன்னிட்டேன் டா...ஐ லவ் யூ டா புருசா" னு சொல்ல சொல்லு து. இதோ அவனுக்கு மெசேஜ் பன்னிட்டேன். அவனும் "ஐ லவ் யூ டூ டி பொண்டாட்டி" னு அனுப்பிட்டான். அவன் இப்போ
எனக்கு புருசன் ஆகப்போறான் அவன் எனக்கு கிடைச்சிட்டான் ன்ற சந்தோசத்த விட என்னால அவன் கோவலனாவும் யாருனே தெரியாத அந்த பொண்ணு மாதவியாவும் ஆகிட்டது தான் மனசு உறுத்தல இருக்கு.
என்ன செய்ய அப்போ.... அந்த... கண்ணகி கோவலனுக்காக மதுரைய எரிச்சா.. இப்போ இங்க கண்ணகியா இருக்கற நான் கோவலனுக்காக யாரு மாதவியா போனா எனக்கென்ன னு என் மனச எரிச்சுக்றேன்.
(நான் எழுதும் நாவலின் ஒரு பகுதியின் சுருக்கம்)

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...