Poem
October 3, 2017
கவிதை
SHARE

சுயவிவரப் படங்கள்
சிரிக்கும் உதடுகளுக்கு பின் கட்டுக்குள் அடங்காத கண்ணீரோடான அழுகை மறைக்க பட்டிருக்கிறது. எல்லோருடைய கேளிக்கும் ஆளாகும் இந்த கோமாளிக்குள் ஏமாற்றங்களையும்
எதிர்பார்ப்புகளையும் கொண்ட ஒருத்தன் தன் இயலாமையை சொல்லி இமை நனையாமல் இரவும் பகலுமாய் அழுது கொண்டிருக்கிறான். அவனுக்கு நிறைய பேராசைகள். அவனை போலவே அவன் ஆசைகளும்
கோமாளித்தனமானவையே. உளி உடைந்தாலும் கல் சிதையாமல் சிலை வேண்டும் என்கிறான். நடக்குமா? அடக்காதீர்கள் சிரித்து விடுங்கள். அவனே சிரித்து கொண்டு தான் இருக்கிறான் தான்
பைத்தியம் ஆகி விட்டதை எண்ணி.
நான் காணுகிற பச்சோந்திகள் நிறத்தை மட்டும் அல்ல நிமிசத்திற்கு கொரு முகத்தை மாற்றிக் கொள்ள கூடியவை. இவைகளுக்கு மற்றவர்களை அழித்தல் தான் தான் வாழ முடியும் என்ற மூட
நம்பிக்கை இருக்கிறது. டார்வின் சொன்ன கொள்கையை இவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் இயற்கை பேரிடர்களை கடந்து நிற்பனவே காலத்தால் நிலைப்படும் " என்ற கருத்தை
இவர்கள் உடன் இருப்பவர்களை எதிர்த்தால் தான் உயிர் வாழ முடியும் உணர்ந்தறிந்து கொண்டார்கள். இந்த பஞ்சோந்திகளுக்கு பாராட்ட தகுந்த பார்த்து வியக்கும் படியான இயல்பொன்று
இருக்கிறது. இவை இருக்கும் இடத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளவதில்லை. தனக்கு ஏற்ப இருக்கும் இடத்தை மாற்றி விடுகின்றன.
வாழாதனவும் வாழ்ந்து பின் மாளாதனவும் மண்ணுலகில் இல்லை. ஓடாமல் தேங்கிய நீரும் வாழ்வும் நிச்சயம் அசுத்தபடும். துன்பம் தோல்வி இறக்கம் துரதிர்ஷ்டம் அழுகை இவையில்லாமல் இன்பம்
வெற்றி ஏற்றம் அதிர்ஷ்டம் சிரிப்பு இவையெல்லாம் எப்படி? சறுக்கி விழுகிறாய் என்றால் நீ ஏறிக் கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம். துன்பமுறுகிறாய் என்றால் அதுவரையிலும்
அதற்கடுத்தும் இன்ப பட்டிருப்பாய் என்று அர்த்தம். முன் என்று இருந்தால் பின் ஒன்று இருக்கும். தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை. முரண்களை களைந்தால் வாழ்வது களைப்பாகி விடும்.
ஜெயிப்பதும் தோற்பதும் அழுவதும் சிரிப்பதும் விழுவதும் எழுவதும் ஏன் வாழ்வதும் வாழ்ந்து பின் சாவதும் கூட கலை. அதை ரசி. ஆனால் மலைத்து நிற்காமல் நகர்ந்து கொண்ட இரு. உடல்
தளர்ந்தாலும் மலர்ந்தாலும் உள்ளத்தில் உயிர் கொள். மெல்ல மெல்ல நட. நடந்து கொண்டே ஓடு. உழை. களைத்து போ. ஓய்வுறு. மறுபடியும் எழ மறுக்காதே. எதையும் ஏற்க பழகு. பென்சீனை போல
வாழ்க்கை பல கோணங்ளை கொண்ட வட்டம். ஒன்றை தொடர்ந்து ஒன்று வரும். அனுபவம் போதிக்கும். எப்போதும் நியூட்டனை நினைவு கொள். ஒவ்வொன்றுக்கும் எதிர்வொன்றும் எதிர்க்கும் ஒன்றும்
உண்டு. இப்போது இதயத் துணிவு கொண்டிருப்பாய். துணிவுக்கடுத்து நிச்சயம் ஏதேனும் ஒரு நிமிசத்தில் துவண்டு போவாய். துணிய மறுப்பாய். இது தான் வாழ்கை. இவ்வளவு தான் வாழ்க்கை.
இரண்டு பட்டதே வாழ்க்கை. காலம் உச்சந் தலைக்கு வெள்ளை அடிக்கும் நாள் வரை செத்து சிறை போகும் நாள் வரை பல்லத்தனையும் உதிர்ந்து மீண்டும் பால்யம் எய்தி கல்லறை போகும் வரை
இப்படி தான். இரண்டுக்குள்ளே அடைபட்டு இருக்க போகிறாய். இதை விட்டு வெளிவா... புதைபடும் உடல் தானே புண்படட்டும். புதிது செய்யட்டும். சுத்தமான தங்கமும் சூடுபடாத தங்கமும்
ஒன்றுக்கும் உதவாது. கொஞ்சம் அசுத்தப்படு நிறைய அடிபடு. அவசியம் என்றால் அழுது கண்ணீர் விடு.
மன தாழ் திறந்து மனதால் கேள். என்னால் முடியாதென்ற தாழ்வுணர்வு தவிர்த்து கேள். தாழ்தல் தவறில்லை தாழ். தாழ்வு பிழையில்லை தாழ். தாழ்ந்து கிடக்கும் நிழல் போல தாழ். மலர் மீது
உறங்கும் பனி போல தாழ். அன்பின் முன் தாழ் அடியார் முன் தாழ். முடியாத பட்சத்தில் விதைபோல தாழ். தாழ்த்தப்படல் தான் தவறு. தாழ்தல் இல்லை. . தாழ்தல் பணிவு. தாழ்தல் மீண்டும்
எழுவதற்கனா மீண்டு எழுவதற்கனா துணிவு. முட்ட போகும் ஆட்டுக்கடா எட்டப் போவது போல் தாழ். பட்ட பகல் நிலவு சுட்டெரிக்கும் சூரியன் முன் தன்னைக் காட்டிக் கொள்ளாதது போல் தாழ்.
வெட்ட வெளிச்சமாய் சொல்கிறேன் திட்டினாலும் ஏற்கிறேன் படுக்கையில் தாழ்ந்தவள் பிறப்பால் உயர்கிறாள் என்பது உணர்ந்து தாழ். வாழ்வில் உயர தாழ்.
நான் யார்க்கும் நல்லவனில்லை. உங்கள் அன்பு பாத்திரமாகும் பாக்கியமும் எனக்கு இல்லை. நான் கடனுக்கு கூட காதல் செய்ய மாட்டேன். அன்பு என்ற சொல் என் அகராதியில் இருந்து அழிந்து
போய்விட்டது. நான் முரண்களின் மூட்டை. நான் முகமூடிக்காரன். நான் பொய் என்னையே நான் வெறுக்கிற போது உங்களை நேசிப்பதென்பது நிச்சயம் நிகழாத காரியம். யாரின் மதிப்பும் எனக்கு
தெரியாது. சொந்தமும் வேண்டாம் பந்தமும் வேண்டாம் பாசமும் வேண்டாம் நேசமும் வேண்டாம். எனக்கென யாரும் வேண்டாம் எனக்கென எதுவும் வேண்டாம். நான் நிரந்தர முகம் இல்லாதவன். நான்
நிகழ்காலத்தால் நிரகாரிக்கப்பட்டவன் நிகழ்காலத்தை நிரகாரித்தவன். நான் எனக்கன்றி யாருக்கானவனும் அல்ல. நான் எனக்கும் உங்களுக்கும் எப்போதும் அந்நியமானவன். நான் யார் மீதும்
விருப்பும் வெறுப்பு மற்ற நிலையில் இருக்கிறேன். எல்லாவற்றையும் போல நானும் நிரந்தரமானவனில்லை. எனக்கு எதற்கும் வரம்புகள் இல்லை. எப்போது வேண்டுமானாலும் எல்லை மீறுவேன் எப்போ
வேண்டுமானாலும் எதிரியாய் மாறுவேன். எப்போது வேண்டுமானாலும் யாரையும் இறப்பேன். ஏன் இப்போதே எல்லோரையும் இறக்கிறேன்.... உங்களையும் தான் இறக்கிறேன் ஏன் உன்னையும் தான்
இறக்கிறேன்.

Ajithkumar இன் செப்டம்பர் மாத நினைவுகள்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...