Back

Poem

August 14, 2017

கவிதை

SHARE

கவிதை

உனக்குள் இருந்து பேசுகிறேன். இந்த பூமியில் நான் உட்பட எல்லோரும் எல்லோரையும் ஏசிக் கொண்டும் நடக்கின்ற குற்றங்களை தட்டிக் கேட்காமல் அதை பற்றி பேசிக் கொண்டுமே தான்
இருக்கிறோம்.பிறப்பும் இறப்பும் இயல்பெனச் சொன்னாலும் பரிணாமத்தின் கழிவாய் எஞ்சி நிற்கும் மனிதன் செய்யும் குற்றங்களையும் நீதிக் கொலைகளையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
1)பிராணவாயுக்கு பஞ்சம்.பிஞ்சிளங் குழந்தைகள் மரணம். 2)மீண்டுமொரு ஆணவக் கொலை. 3)கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை. 4)மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் குடும்பமே தற்கொலை.
இப்படி, இன்னும் இது போன்ற மரணங்களுக்கு பின் என்ன இருக்கிறது.? இந்த மரணங்களுக்கும் கொலைகளுக்கும் யார் காரணம்? எது காரணம்? யோசித்து பாருங்கள் இந்த இறப்புகளுக்கு பின் என்ன
இருக்கிறது? பணம்,நீங்கள் கௌரவம் என்று சொல்லிக் கொள்கிற சாதி மதம். இவை எதனால் யாருக்காக உருவாக்க பட்டவை என யோசியுங்கள். தேவையில்லாதவகளை கட்டிக் கொண்டு ஏன் அவைகளுக்காக
மீட்டெடுக்க முடியாத உயிர்களை பலியிட்டு கொண்டிருக்கிறீர்கள். முதலில் உணர்வுகளுக்கும் உயிர்களுக்கும் மதிப்பு கொடுங்கள். அப்போது தான் நீங்கள் மனிதர் என்பது மற்றவர்களுக்கு
தெரியும். இந்த பூமியில் உயிர்களை விட நீங்கள் கொண்டாடுகிற பணமும் சாமியும் சாதியும் மதமும் கௌரவமும் உயர்ந்ததில்லை. உணருங்கள். சாதியும் மதமும் சமயமும் பணமும் உங்கள் போலி
கௌரவத்தையும் கடந்து வந்து அணைத்து உயிரிடத்தும் அன்பு செலுத்துங்கள். அன்பினும் உயர்ந்தது உலகில் இல்லை. நீங்கள் யாருக்கும் கொடுத்து உதவ வேண்டியதில்லை. அளவுக்கு அதிகமாக
சேமிக்காமல் இருந்தாலே போதும். அவர்களை படைத்த இயற்கை அவர்களுக்கு தேவையானதையும் படைத்து வைத்திருக்கிறது.பணத்திற்காக எல்லாவற்றையும் கூறு கட்டி விற்பதை விட்டு மற்றவர் மனம்
குளிர அன்போடு அரவணைத்து உதவுங்கள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...