Back

Poem

May 26, 2016

கவிதை

SHARE

கவிதை

விடிய விடிய
கணவனோடு கலவு கொண்டவளின்
கருங்கூந்தலில்
அங்கங்கே ஒட்டிக்கிடக்கும்
மல்லிகை உதிரல்களைப் போல
ஒளித்துணுக்குகள்
ஒட்டிக்கிடக்கும் கருவானம்;
பௌணர்மி நிலவின்
பாலொளித் தாலாட்டில்
படுத்து உறங்கிக் கொண்டிருந்தது உலகம்.
நிசப்த ராத்திரி;
நினைவுக் கரையான்களால்
அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
அநாதை இதயம்
;
நோய்பட்டு போனது நொடிகள்
;
விடிய விடிய
வடித்துக் கொட்டியது
விழிகள்
;
மொழிப்பெயர்க்கத் தெரியாத சோகம்
;
கண்மூடினாலும்
இமைக்கதவை எட்டி உதைக்கும்
உப்புத் துளிகள்
;
என்னசெய்வது
யோசித்தேன்
???
நேசம் பாசமெல்லாம்
நிஜமில்லை என்று
நினைத்துக் கொண்டேன்;
உறவுகளில்
ஏதும் நிரந்தரமில்லையென்ற
உண்மை உணர்ந்தேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...