Back

Article

July 8, 2018

கட்டுரை

SHARE

கட்டுரை

#சாதிகள்_உள்ளதடி_பாப்பா.

நன்கு பிரசித்த பெற்ற கரிசல் காட்டு எழுத்தாளரான கி. ராஜநாராயணன் தன்னுடைய "கரிசல் காட்டுக் கடுதாசி" என்ற கட்டுரை தொகுப்பில் "சாதிகள் ஒழிய" என்ற தலைப்பில் "ஜாதி என்று
தான் எழுத நினைத்தேன். ஒழிய வேண்டிய 'களுதை' க்குக் கம்பீரம் என்ன வேண்டிக்கிடக்கு என்று நினைத்துத்தான் சாதி என்று எழுதினேன்" என பாராட்ட தக்க சிந்தனையோடு எழுதி இருப்பார். அவர்
சொன்னதை போல் ஜாதி, மன்னிக்கவும். சாதி ஒழிய வேண்டிய கழுதை தான். ஆனால்,ஒழியாது. சாதி என்பது நெகிழிப்பை அதாவது பிளாஸ்டிக் குப்பைகளை போன்றது. மறுசுழற்சிக்கு உட்பட்டு, காலப்போக்கில் மாறுதலடைந்து
வேறொரு ரூபத்தை பெற்றுக் கொள்ளுமே ஒழிய ஒரு நாளும் அழிந்து போகாது. இந்திய மின்னனு ஓட்டியந்திர கண்டுபிடிப்பிலும், தமிழ் இலக்கியத்தில் புதிது புதிதாய் கதை, கவிதை வடிவங்களை அறிமுகபடுத்தியலும்,
அறிவியல் புனைவு எழுதி தமிழ் இலக்கிய உலகில் புரட்சி செய்ததிலும் பெரும் பங்களிப்பு உடைய சுஜாதா விடம் "இன்னும் ஆயிரம் வருடம் கழித்து ஜாதி மதங்கள் இருக்குமா?" என்று கேட்டதற்கு
"ஆயிரம் ஆண்டுகளில் ஜாதி மதங்கள் வேறு வேஷத்தில் இருக்கும்" என்றாராம்.நூற்றுக்கு இருநூறு சதவீதம் உண்மையான பதில். எத்தனை பெரியார் எத்தனை அம்பேத்கர் வரினும் இதனை முற்றும் ஒழித்து விட
முடியாது. ஒழிக்க விடவும் மாட்டார்கள். சாலையோர மதுக்கடைகளின் தலைவாசலை மாற்றி வைத்து விட்டு அல்லது அதனை அங்கிருந்து வேறொரு இடத்திற்கு மாறுதல் செய்து விட்டு மதுக்கடைகளை ஒழித்து விட்டோம் என
தம்பட்டம் அடித்து சொல்கிற அரசாங்கத்தை போல சாதி என்பதற்கு வேறு பெயரை சூட்டிக் கொண்டோ சாதிச் சான்றிதழ் வாங்கும் மற்றும் கொடுக்கும் பழக்கத்தை ஒழித்து விட்டோ சாதியையே ஒழித்து விட்டோம் என மார்
தட்டிக் கொள்ள வேண்டியது தான்.
சாதி என்பது என்ன? அது எப்படி உண்டானது? இப்போது சாதிக்கு சான்றிதழ் வாங்கி தன் சாதியை அடையாளப் படுத்துவதற்கான தேவை என்ன? என்று கேள்விகளை அடுக்கினோமானால் சாதி என்பது ஒன்றுமில்லை.தொழிலை
அடிப்படையாக கொண்ட குழுக்கள்.ஒரு சாம்பாஷனையின் சின்ன துண்டு பகுதி .
"சாதி தான்டா எனக்கு சாமி, உசுரு எல்லாம்"
"செய்யும் தொழிலே தெய்வம்"
"என்னடா உளறுற லூசு மாதிரி"
"நான் செய்யும் தொழிலே எனக்கு சாதி சாமி எல்லாமும்"
அவரவர் தொழிலே அவரவர் சாதி. உதாரணமாக பறையன் என்றால் பறையறையன்,பறை அடிப்பவன். அவ்வளவுதான். இதற்கு போய் தீண்டத் தகாதவன், கீழ் சாதிக் காரன் என்றெல்லாம் இல்லாத பொல்லாத கற்பிதங்கள். மனித மனம்
எப்போதும் அடிமைபட்டும் பிறரை அடிமைப்படுத்தியும் சந்தோஷமடைந்து அதை ஒரு போதையென பழக்க படுத்திக் கொண்டு விட்டது. சாதிகள் உண்டாவதற்கு முன் பெண்ணை அடிமைபடுத்தி அதிலிருந்து அற்ப சுகம் அனுபவித்து
கொண்டிருந்தார்கள்.இப்போதும் சாதியை கடந்த அடிமைத் தனங்கள், சாதியை விட கேவலமான பேதங்கள் இருக்கின்றன. நம்மை அறியாமலேயே நாம் நவீனத்திற்கு அடிமைப்பட்டு கொண்டிருக்கிறோம்.மேலும் சாதிய பாகுபாட்டை விட
கேவலமானதும் கொடியதுமான இந்த ஆண் பெண் என்ற பாலின பேதத்தை பின்பற்றுவது.
மனிதனுக்கு எப்போது பகுத்தறிவு வளர ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே மனித இனம் ஒரு பெருஞ் சாபத்தை பெறத் தொடங்கி விட்டது. சாதி, சடங்கு, பாரம்பரியம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என கண்ட கருமாந்திர
ஒழுக்கவியல்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து ஒரு வரையறைக்குள் வாழத் தொடங்கியது. தன்னை அடிமைப்படுத்தும் சாதி போன்ற கூறுகளுக்கு விழா எடுத்து கொண்டாட தொடங்கியது.நிற்க.
இப்போது சாதி சான்றிதழ்கள் வேண்டாம். அதனை ஒழிக்க வேண்டும் என பல்வேறு இடத்தில் இருந்து பல்வேறு குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் இடது ஒதுக்கிட்டை ஒழிக்க வேண்டுமாம்.ஏனென்று கேட்டால் இட
ஒதுக்கீடு மக்களிடையே காழ்ப்புணர்ச்சியை உண்டு பண்ணுகிறதென்றும் சமூக நல்லிணக்கத்தை குறைக்கிறதென்றும் கூவித் திரிவர் . எத்தனை வக்கிர புத்தி கொண்ட எண்ணம். இட ஒதுக்கீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டதன்
முக்கிய நோக்கம் அடித்தட்டு மக்களை முன்னேற்றவேயாகும். ஆனால் இட ஒதுக்கீட்டு சலுகைகளை பயன்படுத்தி முன்னேற்றமடைந்தவர்களே அதை ஒழிக்க முற்படுவது வெகு கேவலம்.
எதற்கு இத்தனை வழ வழ கொழ கொழ. முன்பு கமல்-ரஜினி . இப்போது விஜய்-அஜித்.நாளை வேறென்னவோ. இது போல முதலில் ஆண்-பெண். அடுத்து மேல் சாதி - கீழ் சாதி. பின்னாளில் வேறென்னவோ. அவ்வளவுதான். அப்படியே உங்கள்
பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுங்கள் சாதிகள் உள்ளதடி பாப்பா. ஆமாம் இப்தோதைய தலைமுறையினர் எனக்கு இதெல்லாம் புடிக்காது. ஆனா என்ன செய்ய என் அப்பா அம்மா க்காக இத எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு"என
தன் பெரயரோடு சாதிப் பெயரையும் சேர்த்து கொண்டே திரிகிறார்கள். ச்சீ.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...