Back
Article
May 4, 2018
கட்டுரை
SHARE

குழலுமிழ்ந்த தேன்குரலே - நிற்க
நிழலுமிழ்ந்த நெடுமரமே
மணமுமிழ்ந்த பூச்சரமே - என்றன்
மனக்குளம் பூத்த தாமரையே
ஆசை ஊற்றெடுக்கும் மாமலையே - எனை
ஆட்டுவிக்கும் பெரும்பறையே
உளம் ஆளுகின்ற இரும்பொறையே - என்
நலம் பேணுகின்ற தாயுறவே
நான் வேண்டுவது பாயுறவா? - அடி
நானிழந்த பெருவிரலே
நான் வேண்டுவதெல்லாம் - நம்
நரை நாள் வரை காதலும்
நாளும் சிறு மோதலும் - காதினிக்க
கேட்க உன் குரலும்... தானடி
என் தங்கமே.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...