Back

Article

October 24, 2017

கட்டுரை

SHARE

கட்டுரை

பீய், மூத்திரம், வாந்தி, சாக்கடை இந்த வார்த்தைகளை உங்களால் முகத்தை சுழிக்காமல் வாசிக்க முடியாது. இந்த சொற்களையே உங்களால் வாசிக்க முடியாத போது.... அதை (மறுபடியும் உங்களை
முகம் சுழிக்க வைக்க விருப்பமில்லை. அதை என்று எதை குறிப்பிடுகிறேன் என புரிந்து கொள்ளுங்கள்) சுத்தம் செய்கிறவர்களின் நிலைமை என்னவென்று நினைத்துப் பாருங்கள். இங்கு
உங்களுடைய பரிதாபத்தை எதிர்பார்க்க வில்லை. அவர்களுக்கு அவசியம் அதுவல்ல. பொது இடங்களில் இது போன்ற அசிங்கங்களை செய்கிற உங்களை விட அவர்கள் மட்டமானவர்கள் இல்லை. ஆனால்
அவர்களை நீங்கள் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கி வைக்கிறீர்கள். ச்சீ. கேவலமாக இல்லை உங்களுக்கு. அசிங்கத்தை செய்த நீங்கள் கேவலமானவர்களா இல்லை அதை சுத்தம் செய்யும் அவர்கள்
கேவலமானவர்களா.? ஆனால் நீங்கள் அசிங்கமாக நினைக்கும் முன்னமே முகம் சுழித்தீர்களே அதைத் தான் சொல்கிறேன் அதை அள்ளி சுத்தம் செய்ய எத்தனை பெரிய மனது வேண்டும் யோசியுங்கள்.
அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். ஆனால் அவர்களை நீங்கள் மனிதராகக் கூட மதிப்பதில்லை. மேலும் இந்த தொழில் செய்தவர்களின் எத்தனை குடும்பங்கள் இப்போது அனாதையாக இருக்கின்றன
தெரியுமா? அழுகைத் தான் வருகிறது. எத்தனை இழப்புகள். எத்தனை இறப்புகள். மனிதன் என்று திருந்தப் போகிறான். யோசித்தால் எல்லோர் மீதும் கோவம் வருகிறது. காந்தியாம் காந்தி.
சுதந்திர தியாகியாம் தியாகி. அவன் என்ன சொன்னான் இந்திந்த தொழிலை இன்னின்னவன் தான் செய்யனுமாம். அப்போ ஆள்கிறவன் ஆண்டு கொண்டே இருக்கனும் பேள்கிறவன் பேண்டு கொண்டே இருக்கனும்
அள்ளுறவன் அள்ளி கொண்டே இருக்கனும் விஷவாயு தாக்கியும் பாதாள சாக்கடை யில் மூழ்கியும் அதன் விளைவாக வருகிற நோயால் பாதிக்கப்பட்டு சாகிறவன் செத்து கொண்டே இருக்கனும். என்ன
நியாயம் இது. கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு ரெண்டு ரூபாய் காசு கீழே கிடந்தால் எடுக்க குனிகிற நாம் என்றாவது குப்பையை எடுக்க குனிந்திருக்கிறோமா.? ஏன் குனிவதில்லை குப்பை
எடுத்தால் மதிப்பு போய் விடும் மரியாதை போய் விடும். சிரிப்பு கலந்த அழுகைதான் வருகிறது எனக்கு. ஆனால் நான் அழுதால் தான் நிறைய பேசுவேன் நிறைய எழுதுவேன். கொஞ்சம் பொறுமையாக
இல்லை பொறுமை இருந்தால் மட்டும் வாசியுங்கள். குப்பையை எடுக்க கூச்சப் படுகிற நாம் ஏன் குப்பையை போடும் போது கூச்சப்படுவதில்லை. தயவு செய்து திருந்துங்கள். பொதுவெளியில்
நீங்கள் குனிந்து எடுக்க அசிங்கமென நினைக்கும் எதையும் எறியவோ போடவோ செய்யாதீர்கள். குப்பைத் தொட்டி, பொதுக் கழிவறை இவற்றை எல்லாம் சுத்தமாக வைத்திருங்கள்.உங்கள் தகப்பனோ
தாயோ இது போன்ற (அசிங்கத்தை சுத்தம் செய்யும்) பணியில் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்.? அவர்கள் எல்லோரும் நம் தாய், நம் தந்தை, நம் சகோதர சகோதரிகள் என்று நினைத்து
பாருங்கள். நீங்கள் அந்த வேலையை செய்து விட்டு வந்து உங்கள் கணவனோ மனைவியோ உங்களை நிராகரித்தால் எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள். ஆசையோடு வந்து தழுவும் குழந்தைகளை அந்த
அசிங்கங்களை சுத்தம் செய்த கைகளால் எப்படி அணைப்பீர்கள்? எப்படி அந்த கைகளால் உண்பீர்கள் என நினைத்து பாருங்கள். அவர்கள் கையுறை இட்டுக் கொண்டும் நாசிக்கு துணி கட்டிக்
கொண்டும் தானே சுத்தம் செய்கிறார்கள் பிறகென்ன என்று கேட்காதீர்கள். அப்படி கேட்பீர்களானால் பதிலுக்கு உங்களை நானொரு கேள்வி கேட்பேன்.. உங்கள் வீட்டு கழிவறை யை என்றேனும்
சுத்தம் செய்திருக்கிறீர்களா? ஒரு நாள் கையுறை இட்டுக் கொண்டும் முகமூடி அணிந்து கொண்டும் உங்கள் வீட்டுக் கழிவறையையும் கழிவறை கழிவுகளுக்காக கட்டப்பட்ட (drainage)
தொட்டியையும் சுத்தப்படுத்தி விட்டு வந்து அந்த கேள்வியை கேளுங்கள். சுத்தமாக இருக்கிற உங்கள் வீட்டுக் கழிவறையையே உங்களால் சுத்தம் செய்ய முடியாத போது, அசிங்கங்கள் நிரம்பி
வழிகிற பொதுக் கழிவறைகளை சுத்தம் செய்கிற அவர்களின் நிலைமை என்ன? இந்திய அரசாங்கம் ஒரு கேவலமான மட்டமான அரசாங்கம். மனிதர்களை கொண்டு மலம் அள்ளும் அதன் செயல்களை என்ன சொல்வது?
உலகிலேயே அணுக் கழிவுகளை விட மனிதக் கழிவு ஆபத்தானது.அந்த ஆபத்தானதை சுத்தம் செய்யும் போது இறக்கும் மனித உயிர்களின் மதிப்பு பத்து லட்சம். போதுமா? இறந்தால் இவ்வளவு நிவாரணம்
தருகிற அரசாங்கம் அந்த இறப்புகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த மானங்கெட்ட அரசாங்கம் திருந்துகிறதோ இல்லையோ... நீங்களேனும் திருந்துங்கள். ஏனென்றால்
பாதிக்கப்படுவது நம்மில் ஒருவர். அதுவும் நம்மால் தான். இதற்கு பிறகேனும் யோசித்து திருந்துங்கள். (எழுதிய பிறகு பதிவிடலாமா வேண்டாமா என யோசித்த பதிவு இருந்தாலும் பதிவிட்டு
விட்டேன். மன்னிக்கவும். வார்த்தைகளை கொஞ்சம் வரம்பின்றி உபயோகித்து விட்டேன்)

பெண்ணொருத்தி முன்துருத்தி நிற்கும் முலையறுத்துப் பொன்னொரு கையேந்தி விண்ணதிர பேசுகிறாள் கண்ணகியோ என்றென் கண்களைக் கசக்கி எண்ணெய் விட்டெதிர் நோக்க யாரிவளென்று? எண்ண
அலைகள் மோதி மோதி கண்ணாடி உள்ளம் உடைக்க! பெண்ணவள் கருநிற உதட்டில் ஈரம் சேர்த்து ஆரம்பம் செய்கிறாள் "புதையலுக்கா? என்னுடல் புதைதலுக்கா? ஏனென்னை நாடி வந்தான்.
புதுப்புது கவிபாடி அன்புடன் உரையாடி நேசப் போதை ஊட்டி நெஞ்சில்நின்(று) பாச வலையில் வீழ்த்தி என்னைவிட்டு எங்கோடிப் போனான்? இன்னமும் அவனென் அங்கம் கூடத் தீண்டான் என்றாலும்
என்றோ கற்பிழந்தேன் என்பால்! ஆமாம் ஊனோடு ஊனினைந்து மோக ஈர்ப்பினால் புலன்கள் புணவர்தால் மட்டும் கற்பின் நலனது கெடுவதில்லை! நெஞ்சினில் ஒருவனை நினைத்திடும் பொழுதே கற்புத்
தீயது அணைந்து போகிற(து)! அணைந்தும் போனது! கெட்டுப் போனவள் என்றென்னை ஊரே சுட்டுப் பேசவும் சுகக்கே டில்லை. விட்டுப் போனவன் தொட்டு இன்பம் கூட்ட வேண்டாம்! கூடிப் பிரிந்ததன்
விடையதை சொன்னால் போதும்! என்மேல் மடையுடை வெள்ளம் என்று அன்பை அள்ளிப் பொழிந்தது பொய்யா? நிஜமென்றால் தள்ளி நின்றென்னை தள்ளாட வைப்பதேன்? முள்ளுள்ள பூவென அவனது நேசம்
உள்ளிருந்து மெல்ல என்னுயிர் தைக்கிற(து). அடே!என் அன்பு டையவனே! என்னை கடன்காரி யாக்கி காணாமல் போனதேன்? உன்னன்பு மெய்யோ? பொய்யோ? நானறியேன். என்றாலும் மெய்யாலும் உள்ளம்
மகிழ்ந்தேன். அதற்கு பதில் பாசம் காட்ட வேணும் முதலும் முடிவுமாய் ஒருவாய்ப்புத் தாடா! என்மணிக் கழுத்தில் தாலி இல்லாது போனாலும் நானுன் மனைவி தானடா! என்மாமா" என்றவள்
மூச்சுவிடக் கண்டேன் 'கலியுகக் கண்ணகி' அவளை! என் "அன்புடையவளுக்கும் அன்புக்குரியவளுக்கும்" கவிதை தொகுப்பில் இருந்து.

கோல மயிலாட கோபுர நிழலாட நினைவு நீண்டோட நிற்க நிழல் தேட நீலக் குயில் பாட மலராய் மனம் வாட அடி நெஞ்சில் சுமை கூட அது அன்பின் துணை நாட துணைக்கு யாருமில்லை துயர் வடிக்க
கண்ணில் நீருமில்லை. என் வலிக்கு மருந்துமில்லை இந்த வரியை மிஞ்சும் விருந்துமில்லை. துயரக் கண்களுக்கு துளிகள் பாரமில்லை. அயர்ந்து தூங்கினேன் அந்தக் கனவுகளும் தூரமில்லை.
உயர்ந்து பறக்காத்தான் எனக்கொரு சிறகுமில்லை. உயிர் பிரிந்து கிடக்கிறேன் எனை எரிக்க விறகுமில்லை.

வனப்பிலும் வனப்பு பச்சை படர்ந்த வனத்தின் வனப்பேயா கும்.

எழிலுறு நுதலும் ஒளியுறு விழியும் பழிப்புறு இதழும் பார்வையில் திமிரும் பாங்காய் அமைந்த பாவை அவளும் தாங்கா அழகொடு தனங்களை தாங்கி தனித்தே நின்ற எனையும் நோக்கி தனித்தே
வந்தாள் தயக்கம் நீக்கி வெட்கிக் குனிந்து வெளிர் கன்னம் வெட்சி பூவென வேகமாய் சிவக்க பட்டென இதழ்கள் பூத்து சொன்னாள் "மலராய் இருந்தும் மணமொடு இருந்தும் மாலைக்கு ஆகா
தாழை போல வாலிப மிருந்தும் வயது மிருந்தும் வாரி சீன இயலாள் நானும் உந்தன் வார்த்தைக்கு வாக்க படவே சிந்தை கொண்டேன் சிரிப்பும் கொண்டேன் மறுப்பு இன்றி மனமும் ஒன்றி
சிறுகவியில் என்னை சிந்தி வைப்பாய் பாவப்பட்ட ஜீவன் என்னா சையை கோவம் இன்றி கண்ணே நீயும் கொஞ்சம் நிறைவேற்றி வைப்பாய் " என்று. கெஞ்சும் மொழியி லவளெனை கேட்டும் யோசித்து
நின்றேன்! கையேந்தாது காதல் யாசித்து நின்றாளை யாரோ போல நாசியில் விரல்வைத்து வியந்து கொண்டேன் மாசில்லாள் இவளுக்கென்ன மறுமொழி சொல்வதென மனக்குளம் குழம்பி போனேன்! மறுபடியும்
கணமொன்று யோசித்தேன் தெளிந்தேன்! சொன்னேன்!

Ajithkumar இன் இடுகைகள் 1,000 முறை விரும்பப்பட்டுள்ளன

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...