Philosophy
February 22, 2023
ஒரு பைத்தியக்காரனின் டைரி குறிப்புகள்
SHARE

மனிதர்களை எந்த வகையிலும் நம்ப முடிவதில்லை.
அவர்களுக்கு எல்லா நேரத்திலும் எல்லா பொழுதிலும் நானென்ற ஆங்காரம் முட்டிக் கொண்டே நிற்கிறது. உருகி உருகி காதலிக்கிற போதும் கூட அவர்களிடம் நிழலினும்
தாழ்ந்து கிடந்தால் மட்டுமே அது காதலாய் தெரிகிறது அல்லது அதை காதலாக ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களும் காதலிக்கிறார்கள். மீறி சம உரிமை கோருகிறபடியோ அல்லது அவர்கள் நம்மை நடத்துவதைப் போலவோ ஒரு பொழுது நடத்தி விட்டால் போதும் ஆங்காரம் ஓங்காரமாகி தையா தக்கா என்று ஆடத் தொடங்கி விடுகிறார்கள். மனிதர்கள் ஏன் இவ்வளவு மட்டமானவர்களாய் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்போதும் அவர்களுக்கு பிடித்ததை மட்டுமே செய்கிற அல்லது பிடிக்காததை செய்யாத ஒரு அடிமையையே காதலிக்கவும், ஆண்டு வழி நடத்தவும், அப்படியானவர்களுக்கு தலைமையாக இருக்கவுமே ஆசை கொண்டிருக்கிறார்கள்.? ச்சைக். காதலென்பது
கட்டற்ற பெருவெளி அல்லவா.? அது "நான்" ஐ எல்லாம் கடந்ததல்லவா. இது ஏன் இந்த மனித மர மண்டைகளுக்கு புரிய மாட்டேன் என்கிறது? இந்தக் காதோலர்கள் தான் இப்படி என்றால், முற்போக்கு என்று
சொல்லிக் கொண்டு திரிகிற Worm-fire களும் அப்படியாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்குமே கூட அவர்கள் காலை நக்கிக் கொண்டு அவர்கள் சொல்கிற பேச்சுக்கு வாலாட்டிக் கொண்டு திரிய வேண்டும். காதலைப் போல
அறிவும் கட்டற்ற பெரு வெளி தானே? இல்லையா? மனிதர்கள் எப்போது மாறப் போகிறார்களோ தெரியவில்லை.? இதை எல்லாம், இவர்களை எல்லாம் பார்க்கிற போது யாரோடும் சேராத பேசாத வாழ்வே நன்றென்று தோன்றி விடுகிறது.
வன்மதிலும் - தான் - தான் மட்டுமே என்று ஆங்காரத்திலும் வாழ்கிற இவர்களைப் பார்க்கிற போது இவர்களுக்கு மத்தியிலா- வாழ்கிறாய் - என்று எனக்கே என் மீது வெறுப்பு வந்து விடுகிறது. மனிதர்கள் படு மோசமான
பச்சோந்தி பயல்கள். அவர்களுக்கு உண்மை, பொய், நியாயம் அநியாயம், அறம், அறமற்றது என்று எதுவும் தெரியாது. எது அவர்களுக்கு favour செய்கிறதோ அல்லது பிடித்து இருக்கிறதோ அதுவே உண்மை. அதுவே நியாயம்.
அதுவே காதல். அதுவே அறிவு. எது அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இருக்கிறதோ அது அநியாயம். அது பொய். அது அறமற்றது. அவ்வளவே.!
- ஒரு பைத்தியக்காரனின் டைரி குறிப்புகள்.
22-02-2023 @01.08 AM
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...