Back

Poem

September 25, 2018

ஒரு பைத்தியக்காரனின் டைரி குறிப்புகள்

SHARE

ஒரு பைத்தியக்காரனின் டைரி குறிப்புகள்

எதுவும் எனக்கு புதிதாக இல்லை. எல்லாம் இதற்கு முன் பார்த்திருக்கிற பழையதிலிருந்து தோன்றிய நகல்கள். புதிதாக ஒன்றும் உருவாவதில்லை. உருவாக்கப்படுவதில்லை. ஏன்? நான், நானெழுதிக் கொண்டிருக்கிற
எழுத்து எல்லாம் எதிர்கால நிஜத்தின் பிரதி பிம்பங்களாகவோ இறந்த காலத்தின் கட்டாயத்தில் அழிந்து போனவையின் ஆதார பிம்பங்களாகவோ தான் இருக்கும். என் அனுமானத்தின் படி எல்லாரும் எல்லாமும் போலிகள் அல்லது
நகல்கள். இதை நிச்சயம் நீங்கள் ஏற்க மாட்டீர்கள். என்னிடம் ஆதாரமிருக்கிறது. ஆனால் அதை காட்டி நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. நம்பினால் நம்புங்கள்.

மேலும்,
இன்று காலையில் புரபசர் முருகவேணி சில ஆழமான கருத்துகளை சொன்னார். ஒரு விசயத்தை எவ்வளவு தூரம் ஒத்திப் போடுகிறாயோ அது அத்தனை வேகத்தோடு உன்னை விரட்டிக் கொண்டு வரும். உண்மை. இதற்கு உதாரணமாக
பரிட்சைக்கு படிப்பது, சாப்பிடுவது, சிறுநீர் கழிப்பது என பல உதாரணங்கள் சொல்லலாம்.
புரபசர் முருகவேணி சொன்னதை மேற் சொன்னபடி நல்ல முறையிலும் தொடர்படுத்துகிற மனது, அதனை மரணத்தோடு தொடர்பு படுத்தி என்னை செத்தொழிவாய் என ஆசிர்வதித்து அவரசப்படுத்துகிறது. நானென்ன செய்ய.
இப்படி எல்லாம் கூமுட்டை தனமாக தோன்றுவது ஏனென தெரிந்து கொள்கிற பொருட்டு கூகுள் செய்தேன்.
என் பைத்தியக்காரத் தனங்களுக்கு எல்லாம் டோபமைன் தான் காரணமாம்.அதில் குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் எல்லாம் என்னியல்புகளோடு அப்படியே பொருந்து கின்றன. ஆமாம் டோபமைன் மிகுதியாய் சுரக்கிற போது
உறக்கமின்னை, சுறுசுறுப்பு, எப்போதும் பரவ நிலை, இப்படி தேவையில்லாத கற்பனை, மேலும் அதனால் பாதிக்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் கவிஞர்களாகவும், இசைக் கலைஞர்களாகவும், மிகுதியான படைப்பாற்றல்
உடையவர்களாகவுமே இருப்பார்களாம். உடனே என்னை அதனோடு தொடர்புபடுத்தி நான் பைத்தியக்காரனோ என சந்தேகப்படாதீர்கள். நான் சரியாகத் தான் இருக்கிறேன்.

பி. கு : டோபமைன் பிடித்த பெண்களை பார்ப்பதாலும்,டீ காபி குடிப்பதாலும், தன்னின்ப செயல்களாலும், பிடித்த விசயங்களில் ஈடுபடுகிற போதும் சுரக்கிறதாம்.

#ஒரு_பைத்தியக்காரனின்_டைரி_குறிப்புகள்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...