Letter
May 13, 2025
அன்புள்ள மாயாஜாலக்காரியே,
SHARE

காதல் என்கிற பெரும் பித்தலாட்டம்
உன் கண்ணுல தெரியுற ஏக்கம் போதாதுன்னு இப்ப இந்த கடிதத்தையும் படிச்சு ஏங்கிக்கிட்டு இருக்கியா? இல்ல எதாவது காதல் பாட்ட / கவிதைய / படத்த ரசிச்சுகிட்டு "என்ன காதல்... என்ன கனிவு..." அப்படின்னு புருவத்த உயர்த்தி கீழ இறக்கி emotional merry-go-round ஆடிக்கிட்டு இருக்கியா? முதல்ல அத நிறுத்து.
காதல்னா என்ன தெரியுமா?
ஒரு பொண்ணு/பய்யன மட்டும் பாத்துட்டு உலகமே அவங்க கிட்டதான் முடியும்னு நினைக்கிற பைத்தியக்கார தனம்!
ரெண்டு ஹார்மோன்ஸ் சேர்ந்து ஆடற கூத்து. (அதுல இவ்ளோ கவிதையும் கண்ணீரும்?)
மூளைக்குள்ள டோபமைன், செரோடோனின்னு கொஞ்சம் கெமிக்கல்ஸ் ஏறி இறங்குது.
அவ்ளோதான்... அதுக்கு பேர் வச்சு பெருசா ஸ்டோரி எழுதிட்டு இருக்கோம்.
சும்மா "I love you"ன்னு மூணு வார்த்தைய பீச்சி தெளிச்சிட்டு உன் மூளைய நிரந்தரமா brain dead அடிச்சுக்க license வாங்கிட்ட நீ!
ஏய்! யோசிச்சுப் பாத்தியா, எப்படி உலகத்துல 8 பில்லியன் ஜனங்கள்ல ஒரே ஒரு ஆளை (என்னை) மட்டும் பாத்துட்டு, "இவர்தான் என் destiny" அப்படின்னு கம்பியை வளைக்கிற? உனக்கு Mathematics தெரியாதா? இது lottery விட பெரிய முட்டாள்தனம்! அதுவும் இங்க வந்து, நீ முதல் முறையே "jackpot" அடிச்சிடுச்சின்னு சொல்ற? நல்ல ஜோக்!
( இடைக் குறிப்பு: - இப்ப இந்த காதல் கடிதம் கவிதைலாம் விட்டுட்டு உன்ன கொஞ்சம் உண்மையாலுமே Mathematics பண்ணனும் போல இருக்கு!)
இத பத்தின ஒரு பழைய கவிதைய சொருகி வைக்கிறேன். படி.
நரகல் வரும் வழியில் வந்த
நரகல் தானே நாமெல்லோரும்.
நரகலாகிய நம்மில் என்ன
புனிதம்
புனிதமற்றதென்ற
புரிதலற்ற பாகுபாடு..
என்னவோ போ..
உன் வழிக்கே வருகிறேன்..
மலர் போன்ற காதலே
இனிதாய் புனிதமாய் இருக்கிற போது..
மலரினும் மெல்லிய காமம் பற்றி சொல்லவா வேண்டும்..
சரி வா
கருத்து முரண்பாடில்லாமல் கட்டில் மேல் கொஞ்சம் உடன் படு..
உடை கட்டு இடாத உடம்பொடு.
அப்பறம் , காதல romanticize இந்தக் கவிதை கன்றாவிகளை எல்லாம் கொண்டுவராதே என்னிடம்.
"உன் முகம் தான் எங்கும் தெரியுது" அப்படின்னா அதுக்கு மருத்துவத்துல ஒரு பேரு இருக்கு. Hallucination + Obsession! இப்ப உனக்கு மனநல மருத்துவமனைல இடம் கிடைக்கும். ஆனா அத காதல்னு சொல்லி glorify பண்ணும்போது, உன்ன கவிஞன்/கவிஞினு கைதட்டி கௌரவிக்கிறாங்க.
"இரவெல்லாம் தூக்கமில்லாம உன்னையே நினைச்சேன்..."
இது Sleep Disorder டீ! medical-க்கு போய் Sleeping Pill வாங்கிக்க, இல்லன்னா நைட் ஷிப்ட் ஜாப் பாத்துக்க! உன் தூக்கமின்மைய என் தலைல கட்டாத!
"நீ இல்லாம நான் இல்ல"
இது dependency syndrome
உன்னோட individual identity-யே இழந்துட்ட
நீ தனி மனுஷியா இருக்க கத்துக்கோ முதல்ல.
"நீ இல்லாம என்னால வாழ முடியாது"
பச்ச பொய்!
காதலிச்ச அவங்க போயிட்டா வாழ முடியாதுன்னு நினைக்கிற 8 billion பேருக்கும்
இப்போ வரைக்கும் யாரும் செத்துபோகல... தப்பி பிழைச்சிருக்காங்க!
அப்பறம், இந்த காதல் சம்பந்தமா எல்லாருக்கும் ஒரு பயங்கரமான "Selective Memory" இருக்கு. எல்லா திரைப்படங்களும் காதல்ல சந்தோஷமா முடியுற ending-ஐ மட்டும் காட்டறாங்க. Divorce statistics-ஐ யாரும் திரைப்படமா எடுக்கறதில்ல. 50% marriages-லாம் divorcesல முடியுதுன்னு தெரியுமா? அதுவும் மத்த 40% marriage-ல பெரும்பாலானவங்க "செட்டில்" ஆயிட்டாங்கன்னு சொல்லி compromise பண்ணி செத்துக்கிட்டு இருக்காங்க. உண்மையான நல்ல marriage-ஸ் 10% கூட இருக்குமான்னு சந்தேகம்தான்!
இதுக்கப்புறமும் நீ love of my life, soul mate-னு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அறுவது வருஷம் ஒரே புருஷன்கூட "to death do us part" அப்படின்னு வாழப் போறேன்னு சொல்றியா? உனக்கு ஒரே சாப்பாட்டை அறுவது வருஷம் தொடர்ந்து சாப்பிட முடியுமா? தினமும் ஒரு வேள இட்லி சாப்பிட்டா கூட பதினைஞ்சு நாள்ல போயிடும். உன் "love of my life" எப்படி மட்டும் expiry date இல்லாம இருக்கும்?
And, திருமணம்னா தெரியுமா? "மாமியார் vs மருமகள்" போட்டி! "வீட்டுக்காரர் vs ப்ரண்ட்ஸ்" போட்டி! "எங்க பார்ட்டி vs உங்க பார்ட்டி" "நான் vs நீ" போட்டி! இப்படி Clash of Clans விளையாட்டு ஆரம்பிக்க starter packஐ நீயே வாங்கிக்கிட்டு வரது தான் திருமணம்.
"காதலி"க்கறேன் ன்ற பேர்ல நீ உண்மையில் என்ன பண்ற தெரியுமா? என்னோட தோற்றத்தை, அல்லது என் குணங்கள்ல சில அம்சங்களைப் பாத்து அதை "filter" பண்ணி, உன் கற்பனையில ஒரு ஆள புதுசா "create" பண்ணிட்டு, அந்த கற்பனை மனிதர காதல் பண்ற. அதாவது என்னை இல்ல, என்னைப் பத்தி நீ உருவாக்கின கற்பனையை காதலிக்கிற.
அன்னைக்கு சொன்னியே... "நான் உன்ன முதல் பாக்குறப்பவே எனக்கு தெரிஞ்சுடுச்சு நீ தான் எனக்கானவன்னு" அப்பா... ரொம்ப நல்லா சொன்ன! அப்ப beauty contest judge-ஆ நியமிக்கலாமே உன்ன? எப்படி five minutes பார்த்தே ஆளை கணிச்சு கன்பார்ம் பண்ணுவ நீ? ஒரு வருஷம் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்ல இருந்தாக்கூட ஒருத்தர பத்தி முழுசா தெரியாது. ஆனா உனக்கு அஞ்சு நிமிஷம் பாத்தே தெரிஞ்சுடுச்சாம்...!
அப்புறம், எனக்கு சத்தியமா தெரியும், "நீ இல்லனா நான் செத்துடுவேன்" அப்படின்னு சொல்ற நீ தான், இந்தக் காதல் முறிஞ்சா, அடுத்த வருஷம் இன்னொருத்தரோட "best couple" போட்டோ உன் WhatsApp status-ல போட்டிருப்ப! இந்த செத்துடுவேன் எல்லாம் எந்த universal law-படி பேசுற நீ? உலகத்துல ஒவ்வொரு நொடியும் எத்தனை பேர் உன்ன மாதிரி "செத்துடுவேன்" அப்படின்னு அலறுறாங்க தெரியுமா? ஆனா இன்னும் population growth rate-ஆ பாத்தியா? ஏறிக்கிட்டே இருக்கே! யாரும் செத்திடலடீ!
கவிதை, பாட்டு, திரைப்படம், நாவல்ங்கற அத்தனையிலும் "glorify" பண்ணப்பட்ட ஒரு man made concept தான் இந்த காதல்! "பயாலஜிக்கலி" பேசனுமின்னா , இயற்கையோட மிக எளிமையான process-ஆன இனப்பெருக்கத்தை இவ்வளவு dramatize பண்ணி, கொடும பண்ணி, புனிதமாக்கி உயிராக்கி, மயிராக்கி. சாரி.
பேருக்கு , fantasy - க்கு காதல்னு ஒண்ணு இருக்கு... அதுக்கப்புறம் என்ன நடக்கும்னு தெரியுமா? பிள்ளை பெத்து, EMI கட்டி, அப்பா அம்மா மருத்துவமனை செலவு பாத்து, பென்ஷன் ப்ளான் பண்ணி, இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டி இப்படி உன் வாழ்க்கை முழுக்க கடன் கட்டிகிட்டே இருப்ப. காதல் மட்டும் எங்க? அது first year-ல காலாவதி ஆயிடும்!
"ரொமான்ஸ்", "லவ்", "காதல்" , இன்னும் பற்பல bla bla - இதெல்லாம் ஒரே விஷயத்த வித்தியாசமா package பண்ணி விக்கிற "marketing strategies" தான்! அதுக்கப்புறம் "வாழ்க்கை துணை", "partner", "better half" எல்லாம் உருவாகி, கடைசியில் கல்யாணமாகி "தாம்பத்தியம்", "கணவன்-மனைவி", "husband-wife", "spouse", "பதி-பத்தினி" என்று மாறி மாறி repackage பண்ணி உன் மூளைக்குள்ள திணிக்கப்படும் ஒரே பிரதான concept:
"இனப் பெருக்கத்துக்கான இயற்கையான விருப்பமும் சமூக அங்கீகாரமும்".
அவ்வளவு தான்! மத்ததெல்லாம் "ஜாலிக்கு" நம்ம கற்பனை செஞ்சது. ஆனா அந்த "ஜாலி" எல்லாம் "காதல்"னு தலைக்கு மேல தூக்கி வச்சு, அதுல தோத்தா "தற்கொலை" வரைக்கும் போய் நம்ம புத்தி கெட்டு நிக்கறது தாங்க முடியாத அவமானம்!
நிறய பேர்,"நாம் ஏற்கனவே முன் ஜென்மத்தில் சந்தித்திருக்கிறோம்" அப்படின்னு உருட்டுறதுக்கும் ரியலிட்டிக்கும் எவ்வளவு தூரம்? அப்ப ஏன் இந்த "முன் ஜென்ம காதல்" டைவோர்ஸ்ல முடியுது? முன் ஜென்மத்துல கூட "பார்ட்-டைம்" காதலா இருந்திருக்கு போல!
"காதல்அப்பாவுக்கும், அம்மாவுக்கும் எப்படி தெரியப்படுத்துறது?"
"பணம் இருக்கா? வேலை இருக்கா? பையன்/ பொண்ணு என்ன பண்றாங்க? என்ன வேலை? எவ்வளவு சம்பளம்?"
இப்படித்தான் உண்மையான காதல் போக்கு இருக்கு! சமூகத்துக்கு எதிரா "நாங்க அப்பா அம்மாவ மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்"னு கம்பீரமா செய்யற காதல் திருமணம், வாழ்க்கை ரியாலிட்டில மோதி பொடி பொடியா நொறுங்குது. ( so, காதல் பண்ணவும் சரி , கணக்கு பண்ணவும் சரி, கக்கூஸ் போகவும் சரி - காசு முக்கியம். )
வீணா, இந்த "காதல்" பொய்யை நம்பிக்கிட்டு, கற்பனை உலகம் கட்டி, அதுல உன்னை idealize பண்ணி, அந்த மாயையில் தொலைஞ்சிடறத விட, உன்ன உன்னப்போல பாத்து, உன் பிரச்சனைகளோட, குறைகளோட ஏத்துக்கிட்டு, சமூகத்துக்காக "காதல்" "காதல்"ன்னு சத்தம் போடாம சும்மா ஒண்ணா வாழ்ந்தா என்ன?
பாரு, என்னோட நோக்கம் உன்ன காயப்படுத்தறது இல்ல. காதல் எனும் "ப்ளசிபோ" வை உடைக்கறது தான். இந்த ப்ளசிபோ பற்றி தெரியுமா உனக்கு? அது ஒரு மருந்து மாதிரி தோற்றமளிக்கும், ஆனா உண்மையில் எந்த மருந்தும் இல்லாத வெறும் மாத்திரை. ஆனா கூடுதல சுவாரஸ்யம் என்னன்னா, சில நேரங்களில் இந்த ப்ளசிபோ-க்கும் சில பேர்க்கு வியாதி குணமாகுது. அதே போல, காதலும் ஒரு ப்ளசிபோ தான். அது உண்மையில் இல்ல, ஆனா நம்பிப் பயன் அடையலாம். Love is our placebo, baby.
இப்போ கேட்கலாம், "காதல் இல்லேன்னா என்ன இருக்கு?"... அது உண்மையான விடுதலை. தனித்து இருக்கப் பயப்படாத திடம். உன்னைப் பற்றி நீயே தெரிஞ்சுகிட்டு, உன் வலிமைகளை அடையாளம் கண்டு, உன் இலக்குகளை நோக்கி நீ பயணிக்கற பயணம். யாரையும் சார்ந்திருக்காத சுதந்திரம்.
உண்மையான அன்பு என்பது விடுதலை. புத்தர் என்ன சொன்னார் தெரியுமா? "பற்று அற்றவனே பரம சுகம் அடைவான்". ஆனா நாம என்ன பண்றோம்? "காதல் தான் பற்றுதல்"னு சமூகத்தையே பைத்தியம் ஆக்கிட்டோம்.
"But I still want to be with you..."
பரவாயில்ல. காதல் இல்லாமலும் உன்னோட இருக்க முடியும். நான் உன்னை "லவ்" பண்ணாமலே "அக்செப்ட்" பண்ண முடியும். உன்னோட குறைகளோட, எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு, நாம இருவரும் தனித் தனியா வளர முடியும்.
இல்லன்னா, நம்ம மூளைக்குள்ள இருக்கற கெமிக்கல்ஸ் ஒன்னா சேர்ந்து விளையாடுறத "காதல்"னு சொல்லிக்கிட்டு அதையும் என்ஜாய் பண்ணலாம். ஆனா அந்த உண்மையைத் தெரிஞ்சே என்ஜாய் பண்ணலாம்.
தேர்வு உன்னோடது.
காதலின் உண்மை நிலையைத் தெரிந்துகொண்ட,
மாயையின் மறுபக்கத்திலிருந்து,
உன் "ப்ளசிபோ ப்ரொவைடர்"
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...